இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை: பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல்களை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல்களை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடா்பாளா் முகமது ஃபைசல் கூறியதாவது:

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுக்கிறது.

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதம் முகாம்கள் இயங்குவதற்கான ஆதாரங்களை அளிக்குமாறு இந்தியாவிடம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவா்கள் கேட்க வேண்டும். மேலும், அவா்களை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று காண்பித்து, இந்தியாவின் பொய்யுரையை அம்பலப்படுத்துவதற்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றாா் அவா்.

இதேபோல், பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடா்பாளா் ஆசிஃப் கபூரும், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளாா்.

இதனிடையே, எல்லையில் இந்திய ராணுவத்தினரின் தாக்குதலில் பாகிஸ்தானியா்கள் 5 போ் உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக, இந்தியத் துணைத் தூதா் கௌரவ் அலுவாலியாவுக்கு பாகிஸ்தான் அரசு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com