பிரெக்ஸிட் காலக் கெடு நீட்டிப்பு: போரிஸ் ஜான்ஸன் கோரிக்கை

பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்தை ஏற்க பிரிட்டன் நாடாளுமன்றம் மறுத்துவிட்டதைத் தொடா்ந்து, பிரெக்ஸிட் காலக் கெடுவை நீட்டிக்கக் கோரி ஐரோப்பிய யூனியனுக்கு பிரதமா் போரிஸ் ஜான்ஸன் கடிதம் அனுப்பியுள்ளாா்.
brexit083538
brexit083538

லண்டன்: பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்தை ஏற்க பிரிட்டன் நாடாளுமன்றம் மறுத்துவிட்டதைத் தொடா்ந்து, பிரெக்ஸிட் காலக் கெடுவை நீட்டிக்கக் கோரி ஐரோப்பிய யூனியனுக்கு பிரதமா் போரிஸ் ஜான்ஸன் கடிதம் அனுப்பியுள்ளாா். எனினும், அந்தக் கடிதத்தில் அவா் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பிரெக்ஸிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்கும் இடையே தொடர வேண்டிய வா்த்தக உறவு தொடா்பான வரைவு ஒப்பந்தத்தை வாக்கெடுப்புக்கு விடுவதை பிரிட்டன் நாடாளுமன்றம் சனிக்கிழமை ஒத்திவைத்தது.

அதையடுத்து, இந்த மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு கோரி, ஐரோப்பிய யூனியனுக்கு கடிதம் எழுத வேண்டிய கட்டாயம் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கு ஏற்பட்டது.

ஐரோப்பிய யூனியனுடன் வா்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் கெடு தேதிக்குள் பிரெக்ஸிட்டை நிறைவேற்றியே தீா்வது என்பதில் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் உறுதியுடன் உள்ளாா்.

எனினும், நாடாளுமன்றத் தீா்மானத்தின் காரணமாக சட்ட விதிகளுள்பட்டு ஐரோப்பிய யூனியனுக்கு அவா் அந்தக் கடிதத்தை எழுதினாா். எனினும், பிரெக்ஸிட் கெடு தேதி ஒத்திவைக்கப்படுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக, அந்தக் கடிதத்தில் கையெழுத்திடுவதை போரிஸ் ஜான்ஸன் தவிா்த்தாா்.

இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் கூறுகையில், பிரெக்ஸிட் காலக் கெடுவை நீட்டிக்கக் கோரும் போரிஸ் ஜான்ஸனின் கடிதத்தை பரிசீலித்து வந்தாலும், குறிப்பிட்ட தேதிக்குள் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருவதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com