பிலிப்பின்ஸில் மகாத்மா காந்தி சிலை: திறந்து வைத்தார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

பிலிப்பின்ஸ் நாட்டுக்கு 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்து 150 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் விதமாக அந்நாட்டில் அவரது மார்பளவுச்
பிலிப்பின்ஸின் மணிலா நகரில் உள்ள மிரியம் கல்லூரியில், மகாத்மா காந்தியின் சிலையை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து மரியாதை செலுத்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.
பிலிப்பின்ஸின் மணிலா நகரில் உள்ள மிரியம் கல்லூரியில், மகாத்மா காந்தியின் சிலையை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து மரியாதை செலுத்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.

மணிலா: பிலிப்பின்ஸ் நாட்டுக்கு 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்து 150 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் விதமாக அந்நாட்டில் அவரது மார்பளவுச் சிலையை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். 
மணிலாவில், அமைதிக் கல்விக்கான மிரியம் கல்லூரியில் நடைபெற்ற இந்தச் சிலை 
திறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: 
அரசியல் மறுசீரமைப்புக்காக போராடிய ஜோஸ் ரிஸால் பிறந்த பிலிப்பின்ஸ் நாட்டில், மகாத்மா காந்தியின் உருவச் சிலையை திறந்து வைப்பதில் பெருமை அடைகிறேன். 
மகாத்மா காந்தி, ஜோஸ் ரிஸால் அமைதி மற்றும் அஹிம்சையின் ஆற்றலை நன்றாக அறிந்திருந்தனர். தில்லியில் உள்ள ஒரு சாலைக்கு ஜோஸ் ரிஸாலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவர் எங்களுக்கான உத்வேகம் அளிப்பவராக இருக்கிறார்.
காந்தியை கெளரவிக்கும் விதமாக அவரது சிலை வைக்க இடமளித்த மிரியம் கல்லூரிக்கு நன்றிகள். இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, சக மனிதனை மதித்தல், நேர்மையாக இருத்தல், எந்தச் சூழலிலும் உண்மையை பேசுதல் போன்ற காந்திய கொள்கைகள் முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன். 
மகாத்மா காந்திக்கு பிடித்த "வைஷ்ணவ ஜனதோ' பாடலை பிலிப்பின்ஸ் பாடகி கிரேஸ் நோனோ இசையமைத்துப் பாடியுள்ளதை அறிந்து மகிழ்கிறேன். 
காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டில், அவரது அந்தப் பாடல் 150-க்கும் மேலான நாடுகளில் ஒலிப்பது காந்திக்கான அஞ்சலியாக இருக்கும். 
மகாத்மா காந்தியின் சிலை, பிலிப்பின்ஸýக்கான இந்திய மக்களின் பரிசாகும். காந்தி அனைத்து மக்களுக்கும், அனைத்து கலாசாரங்களுக்கும், அனைத்து சமுதாயத்துக்கும் பொதுவானவர். அமைதி, நல்லிணக்கம், நிலையான வளர்ச்சிக்கான நமது ஒருங்கிணைந்த பயணத்துக்கு காந்தியின் போதனைகள் வழிகாட்டும். 
இந்தியா-பிலிப்பின்ஸ் இடையேயான உறவு சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல; மனதுக்கு நெருக்கமான ஒன்றாகும். இந்த நட்பு எப்போதும் கொண்டாடப்படக் கூடியது; நினைவில் நிற்கக் கூடியது என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார். 
இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு: பின்னர், பிலிப்பின்ஸில் உள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், "நாட்டின் பாரம்பரியத்தை பிரபலப்படுத்த வேண்டும்' என்று அவர்களை வலியுறுத்தினார். 
அவர் மேலும் கூறுகையில், "பிலிப்பின்ஸின் பொருளாதாரத்துக்கும், இந்தியாவுக்கும், இந்தியர்கள் என்ற அடையாளத்துக்கும் இந்திய வம்சாவளியினர் சிறப்பாக பங்களிப்பு செய்துவருகின்றனர். அனைத்து மக்களின் நலனுக்காக இந்தியாவின் பாரம்பரியத்தையும், அறிவையும் பிரபலப்படுத்த வேண்டும். 
பிலிப்பின்ஸில் நமது யோகா வளர்ச்சியடைந்துள்ளதும், ஆயுர்வேத மருத்துவம் வளர்ந்து வருவதும் பாராட்டுக்குரியது. தமிழ், மலையாளம், ஹிந்தி எதுவானாலும், தாய்மொழியை அன்றாட வாழ்வில் நீங்கள் தவறாமல் பயன்படுத்தி வருவது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com