ஆட்சியில் தொடர இம்ரான் கானுக்கு தகுதியில்லை: பிலாவல் புட்டோ

பாகிஸ்தான் பிரதமராக ஆட்சியில் தொடர இம்ரான் கானுக்கு தகுதியில்லை என்று அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ கூறியுள்ளார்.
ஆட்சியில் தொடர இம்ரான் கானுக்கு தகுதியில்லை: பிலாவல் புட்டோ


பாகிஸ்தான் பிரதமராக ஆட்சியில் தொடர இம்ரான் கானுக்கு தகுதியில்லை என்று அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ கூறியுள்ளார்.
இம்ரான் கான் அரசு கைப்பாவை அரசாக செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார். ஆனால், அவர் யாருடைய (ராணுவம்) கைப்பாவை என்பது குறித்து பிலாவல் ஏதுவும் நேரடியாக கூறவில்லை.
கராச்சியில் உள்ள ஜின்னா மருத்துவ உயர்கல்வி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிலாவல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியது:  இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக்-ஏ-இன்ஃசாப் கட்சியின் ஆட்சியில் பாகிஸ்தான் பல துறைகளில் பின்தங்கி வருகிறது. வெளியுறவுக் கொள்கை, உள்நாட்டுப் பொருளாதாரத்தை கையாளுவது என அனைத்து நிலைகளிலும் இந்த அரசு தோல்வியடைந்துவிட்டது. முக்கியமாக பிரதமர் இம்ரான் கான் (ராணுவத்தின்) கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். எனவே, இனிமேலும் ஆட்சியைத் தொடரும் தகுதி அவருக்கு இல்லை. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் இம்ரான் கான் நிறைவேற்றவில்லை. அவர் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினருமே இந்த ஆட்சியால் ஏதாவது ஒருவகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் விரோத கொள்கைகளைக் கொண்டுள்ள இந்த அரசு தூக்கி வீசிப்பட வேண்டுமென்றே அனைவரும் விரும்புகின்றனர் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com