தொழில் நடத்தும் சூழல்! உலக தரவரிசையில் 15 இடங்கள் முன்னேறியது சீனா!

தொழில் நுடத்துவதற்கான சூழல் மேம்பாடு மிக வேகமாக உள்ள முதல் 10 பொருளாதாரங்களில் சீனாவைத் தவிர, இந்தியா, பாகிஸ்தான், சௌதி அரேபியா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.
தொழில் நடத்தும் சூழல்! உலக தரவரிசையில் 15 இடங்கள் முன்னேறியது சீனா!

தொழில் நடத்துதல் 2020 எனும் ஆண்டறிக்கையை உலக வங்கி 24-ஆம் நாள் முற்பகல் வெளியிட்டது. இவ்வாண்டு, சீனாவில் தொழில் நடத்துவதற்கான சூழல், உலக தரவரிசையில், 15 இடங்கள் முன்னேறி, 31-ஆவது இடத்தில் உள்ளது. முன்பாக, இத்தரவரிசையில் சீனா 78-ஆவது இடத்தில் இருந்து, 46-ஆவது இடத்துக்கு வந்தது நினைவுகூரத்தக்கது. நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் உள்நாட்டில் தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் வகையில், மாபெரும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் சீனா முனைப்புடன் சீர்திருத்த வேகத்தை நிலைநிறுத்தியுள்ளது. தொழில் நடத்துவதற்கான பல்வகை குறியீடுகளில் பாராட்டத்தக்க முன்னேற்றமும் அடைந்துள்ளது என்று உலக வங்கியின் சீன ஆணைய தலைவர் மார்டின் ரெஸ்சர் தெரிவித்தார்.

தொழில் நுடத்துவதற்கான சூழல் மேம்பாடு மிக வேகமாக உள்ள முதல் 10 பொருளாதாரங்களில் சீனாவைத் தவிர, இந்தியா, பாகிஸ்தான், சௌதி அரேபியா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com