பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கான கால அளவை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கான கால அளவை நீட்டிக்க வேண்டும் என்ற பிரிட்டனின் வேண்டுகோளிற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
டொனால்ட்  டஸ்க்
டொனால்ட்  டஸ்க்

லண்டன்: பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கான கால அளவை நீட்டிக்க வேண்டும் என்ற பிரிட்டனின் வேண்டுகோளிற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வகை செய்யும் ஒப்பந்தமானது பிரெக்சிட் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.  இதுதொடர்பாக இரு தரப்பிற்கும் சுமுகமான ஒரு ஒப்பந்தத்தைக் கொண்டு வரும் முயற்சியில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரேசா மே தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்யும் நிலை உருவானது. 

அவருக்கு அடுத்து பதவிக்கு வந்த போரிஸ் ஜான்சன் இதனை செயல்படுத்தி விட வேண்டும் என்று தீவிரமாக செயலாற்றினார். குறிப்பாக இம்மாத இறுதிக்குள் அதாவது 31-ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறி விடும் என்று அறிவித்திருந்தார்.

ஆனால் அவரது ஒப்பந்த வரைவை இம்மாதம் 19-ஆம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில் எம்.பிக்கள் தோற்கடித்தனர். இதையடுத்து அவருக்கு சிக்கல் உண்டானது. அவர் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கான கால அளவை நீட்டிக்க வேண்டும் என்ற பிரிட்டனின் வேண்டுகோளிற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட்  டஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கான கால அளவை ஜனவரி 31, 2020 வரை நீட்டிக்க வேண்டும் என்ற பிரிட்டனின் வேண்டுகோளிற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக விரைவில் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் மூலம் உறுதிப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com