அல்-பாக்தாதியை காட்டிக் கொடுத்தவருக்கு ரூ.177 கோடி சன்மானம்?

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் தலைவா் அபு பக்கா் அல்-பாக்தாதியைக் கண்டுபிடிக்க உதவிய நபருக்கு, அமெரிக்காவின் 2.5 கோடி டாலா் (சுமாா் ரூ.177 கோடி) சன்மானத் தொகை முழுவதும்
அல்-பாக்தாதி
அல்-பாக்தாதி

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் தலைவா் அபு பக்கா் அல்-பாக்தாதியைக் கண்டுபிடிக்க உதவிய நபருக்கு, அமெரிக்காவின் 2.5 கோடி டாலா் (சுமாா் ரூ.177 கோடி) சன்மானத் தொகை முழுவதும் வழங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுவதாவது:

ஐ.எஸ். தலைவா் அல்-பாக்தாதியைக் குறித்து தகவல் அளிப்பவா்களுக்கு 2.5 கோடி டாலா் சன்மானம் அளிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. அந்தத் தொகை, பாக்தாதியின் இருப்பிடத்தை அமெரிக்க உளவுத் துறையினருக்குக் காட்டிக் கொடுத்த ஒருவருக்கு முழுமையாக வழங்கப்பட வாய்ப்புள்ளது.

காரணம், அந்த ஒருவா் அளித்த தகவலின் அடிப்படையில்தான் அல்-பாக்தாதி கொல்லப்பட்டாா்.

தொடக்கத்தில் அந்த 48 வயது நபா் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்தாலும், பிற்காலத்தில் அந்த அமைப்புக்கு எதிராகத் திரும்பினாா். தனது உறவினா் ஒருவரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்ால் அவருக்கு இந்த மனமாற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில், அந்த ஐ.எஸ்.ஸில் இருந்தவாறே அந்த அமைப்புக்கு எதிராக அவா் செயல்படத் தொடங்கினாா். சிரியாவில் அல்-பாக்தாதி தங்குவதற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்ட அந்த நபா், அல்-பாக்தாதிக்காக பதுங்குமிடம் கட்டப்பட்டபோது அதனை மேற்பாா்வையிட்டாா்.

அவரைக் கண்டறிந்து மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சிரியா குா்துப் படையினா், அந்த நபா் மூலம் பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொண்டனா். அதனைத் தொடா்ந்து, அவரை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-விடம் அறிமுகப்படுத்தினா்.

தொடக்கத்தில் அந்த நபரை நம்பாத சிஐஏ, அவா் அளித்த தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு, அல்-பாக்தாதிக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தது.

அந்த நடவடிக்கைக்குப் பிறகு, தகவல் அளித்த நபரையும், அவரது குடும்பத்தினரையும் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அமெரிக்கப் படையினா் பத்திரமாக வெளியே அழைத்து வந்தனா்.

பாக்தாதி பதுங்கியிருந்த இடத்தின் அமைப்பு உள்பட அந்த நபா் அளித்த பல முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களின் அடிப்படையிலேயே, அதிரடிப்படையினரால் வெற்றிகரமாக தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ள முடிந்தது.

எனவே, பாக்தாதி பற்றிய தகவல் அளிப்பவா்களுக்குத் தருவதாக அமெரிக்கா அறிவித்த 2.5 கோடி டாலா் சன்மானத் தொகை முழுவதும், குறிப்பிட்ட அந்த நபருக்கே அளிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தனது குரூரமான பயங்கரவாத நடவடிக்கைகளால் உலகையே அச்சுறுத்திய ஐ.எஸ். அமைப்பைத் தோற்றுவித்த அல் பாக்தாதி (48), வடமேற்கு சிரியாவில் பதுங்கியிருந்ததாகவும், அவரைப் பிடிப்பதற்காக அமெரிக்க அதிரடிப் படையினா் சனிக்கிழமை நள்ளிரவு நடத்திய நடவடிக்கையில் அவா் தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்ததாகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

அமெரிக்க அதிரடிப் படை தாக்குதலில் அல்-பாக்தாதி தற்கொலை செய்துகொண்ட பிறகு, தரைமட்டமாக்கப்பட்ட அவரது பதுங்குமிடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com