"காஷ்மீரில் இனப் படுகொலை": இம்ரான் குற்றச்சாட்டை நிரூபிப்பது கடினம் என பாக்., வழக்கறிஞர் கருத்து

காஷ்மீரில் இனப்படுகொலை நடக்கிறது என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் குற்றச்சாட்டை நிரூபிப்பது மிகக் கடினம் என்று அந்நாட்டின் சர்வதேச நீதிமன்ற வழக்கறிஞர் கவார் குரேஷி தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


காஷ்மீரில் இனப்படுகொலை நடக்கிறது என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் குற்றச்சாட்டை நிரூபிப்பது மிகக் கடினம் என்று அந்நாட்டின் சர்வதேச நீதிமன்ற வழக்கறிஞர் கவார் குரேஷி தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவை விமரிசித்து வருகிறது. இந்தப் பிரச்னையை அனைத்து சர்வதேச மன்றத்துக்கும் கொண்டு செல்வோம் என்று தெரிவித்து வந்த பாகிஸ்தான், முதற்கட்டமாக இதை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு சென்றது. அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் இதைப் பல்வேறு உலகத் தலைவர்களிடம் கொண்டு சென்றார். எனினும், அமெரிக்க உட்பட அனைத்து நாடுகளும் இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை என்றே தெரிவித்துவிட்டன. 

இருந்தபோதிலும், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து வந்தார். 

இந்நிலையில், சர்வதேச நீதிமன்றத்தின் பாகிஸ்தான் வழக்கறிஞர் கவார் குரேஷி பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 

"காஷ்மீரில் இனப்படுகொலை நடக்கிறது என்கிற குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தானிடம் குறிப்பிடத்தக்க ஆதாரம் ஏதும் இல்லை. அப்படி ஆதாரங்கள் இல்லாத சூழலில், இதை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வது மிகக் கடினம்" என்றார்.

ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை அனைத்து சர்வதேச மன்றங்களுக்கும் கொண்டு செல்வோம் என்று இம்ரான் கான் தெரிவித்து வரும் நிலையில், குரேஷியின் இந்தக் கருத்து முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com