மெக்ஸிகோ தடுப்புச் சுவர்: 3.6 பில்லியன் டாலர் ஒதுக்கீடு

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் 3.6 பில்லியன் டாலர்களை செவ்வாய்கிழமை ஒதுக்கீடு செய்துள்ளது.
மெக்ஸிகோ தடுப்புச் சுவர்: 3.6 பில்லியன் டாலர் ஒதுக்கீடு

மெக்ஸிகோ எல்லையில் சர்ச்சைக்குரிய தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் 3.6 பில்லியன் டாலர்களை செவ்வாய்கிழமை ஒதுக்கீடு செய்துள்ளது.

மெக்ஸிகோ எல்லையில் 92 கி.மீ. தூரத்துக்கு 18 அடி உயரத்துக்கு தடுப்பு வேலி அமைக்கவும், சாலைகளை மேம்ப்படுத்தும் பணிகளில் அமெரிக்க மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த நடவடிக்கையில் மிகவும் தீவிரமாக உள்ளார். இதனை திட்டமிட்டு நிறைவேற்றுமாறு ராணுவ பொறியாளர் பிரிவுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, பாதுகாப்புக்கான பட்ஜெட்டிலிருந்து 100 கோடி டாலரை ஒதுக்கீடு செய்துள்ளதாக நாடாளுமன்றத்திடம் சமர்ப்பித்துள்ள அறிவிக்கையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்ற அனுமதியில்லாமலேயே எல்லைச் சுவர் எழுப்பவதற்கான நிதியைப் பெறும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவசர நிலை அறிவித்ததற்குப் பிறகு முதல் முறையாக இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com