ஆறு நாள் குழந்தையை கைப்பைக்குள் மறைத்துக் கடத்த முயன்ற பெண் கைது   

பிறந்து ஆறு நாட்களே ஆன குழந்தையை கைப்பைக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்ற அமெரிக்கப் பெண் பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையை கடத்த முயன்று கைதான அமெரிக்கப் பெண்மணி
குழந்தையை கடத்த முயன்று கைதான அமெரிக்கப் பெண்மணி

மணிலா: பிறந்து ஆறு நாட்களே ஆன குழந்தையை கைப்பைக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்ற அமெரிக்கப் பெண் பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் டால்போட் (43) என்ற பெண்மணி பிலிப்பைன்ஸ் நாட்டின் நினாய் அகினோ சர்வதேச விமான நிலையத்தில், புதனன்று ஆறு நாள் குழந்தையை மறைத்து வைத்துக் கடத்த முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 

விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் போர்டிங் கதவின் அருகே அவரது சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகளைக் கண்டு, குடியுரிமை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகப்பட்டுக் கேள்வி கேட்ட போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தற்போது அந்தப் பெண்ணை போலீஸ் கைது செய்த பின்னர், அவரையும் குழந்தையையும் பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய விசாரணை ஆணையம்  தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்தக்  குழநதையின் பெற்றோரை தேடிக் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.              

இதுதொடர்பாக பிலிப்பைன்ஸ் நாட்டின் குடியுரிமை ஆணைய தலைவர் க்ரிப்டன் மெதினா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அந்தப் பெண் விமான நிலையத்திற்குள் நுழையும் போது குழந்தையைக் கையில் வைத்திருந்திருக்கிறார் என்று நினைக்கிறோம். அதன் காரணமாகத்தான் நுழைவாயிலில் உள்ள எக்ஸ்ரே சென்சார்களில் அது கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அவர் விமான நிறுவன கவுண்டரை நெருங்கும் போதும், குடியுரிமை விசாரணைக் கவுன்டரை நெருங்கும் போதும்  குழந்தையை தனது கைபையில் மறைத்துக் கொண்டுள்ளார்.     

அங்கு சோதனைகள் முடிந்து மூன்றாவது முனையத்தில் போர்டிங் கதவை நெருங்கிய சமயம் குழந்தையை வெளியே எடுத்துள்ளார். அதைக் கண்டு குடியுரிமை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகப்பட்டுக் கேள்வி கேட்ட போது அவரது கடத்தல் முயற்சி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுதொடர்பாக தொடர்ந்து முரணான தகவல்களை கூறியதால் அவர் கைது செய்யபட்டார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com