பிரெக்சிட் நிறைவேற்றப்படும்; இல்லையெனில் நான் உயிரைவிடுவேன் : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகும் திட்டத்தை அக்டோபர் 31ம் தேதிக்குள் நிறைவேற்றவில்லை எனில் உயிரை விட தயார் என அந்நாட்டு பிரதமர் போரிஸ்  ஜான்சன் கூறியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ்  ஜான்சன்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

ஐரோப்பிய ஒன்றியம் என்றால் என்ன? (European Union)

பொருளாதார மற்றும் அரசியல் ஒத்துழைப்புக்காக இரண்டாம் உலகப் போருக்கு பின் ஏற்படுத்தப்பட்டதுதான் ஐரோப்பிய ஒன்றியம். இந்த ஒன்றியத்தில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, க்ரோஷியா, சிப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், ஃபின்லாந்து, ஃப்ரான்ஸ், க்ரீஸ், ஜெர்மனி, ஹங்கேரி, ஐயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் உள்ளிட்ட 28 நாடுகள் இருந்தன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கென்று, `ஈரோ' என்ற தனி பணம் உள்ளது. இதனை 19 நாடுகள் பயன்படுத்துகின்றன. இதற்கென்று நாடாளுமன்றமும் உள்ளது.

பிரெக்ஸிட் என்றால் என்ன? (Brexit)

(withdrawal of the United Kingdom from the European Union)

பிரிட்டன் வெளியேறுதல் என்று பொருள். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான விஷயமாதலால், இப்பதம் பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் ஏன் வெளியேறுகிறது?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறே வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததற்கு முதன்மையான காரணம் குடியேற்றம்தான். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்த பலநாடுகள் குடியேற்ற விஷயத்தில் தாராளவாத ப்போக்குடன் நடந்து கொண்டது. பல நாடுகளிலிருந்து வருவோர் பிரிட்டனில் குடியேறுவதன் காரணமாக, தங்கள் நாட்டின் கலாச்சாரம், பொருளாதாரம் மோசமடைவதாக பிரிட்டன் மக்கள் கருத த் தொடங்கினர். இந்த எண்ணமானது இது தொடர்பாக ஒரு வாக்கெடுப்புக்கு வித்திட்டது. 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடந்த அந்த வாக்கெடுப்பில் 71.8 % பேர் கலந்து கொண்டனர். 51.9 % மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தெரசா மே

மார்கரெட் தாட்சரைப் போன்று நிலையான ஓர் இடத்தை பிடித்த தலைவர்கள் பட்டியலில் தெரசா மேவும் இணைகிறார். ஜூலை 2016ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகம் இருக்கும் டவுனிங் தெருவில் அவர் நுழைந்தபோது அவர் என்ன மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தாரோ நிச்சயமாக அதை ஏற்படுத்த முடியவில்லை. அவர் பிரதமராக பதவி ஏற்ற போது கொண்டிருந்த, நாட்டில் பெரிதும் கண்டுகொள்ளாத பகுதிக்கு சென்றடைய வேண்டும், பிரிட்டிஷ் சமூகத்தில் நிலவும் "அநீதிகளை" சரி செய்ய வேண்டும் என்ற கொள்கைகள் எல்லாம் பிரிக்ஸிட் என்ற ஒற்றை வார்த்தையால் மழுங்கடிக்கப்பட்டுவிட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறும் பிரிட்டனின் முடிவு, தனக்கு முன் பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் காலத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கேற்பு வாக்கெடுப்பின் முடிவுகளை செயல்படுத்துவதற்காக அவர் எடுத்துக்கொண்ட விடாமுயற்சி ஆகியவைதான் தெரசா மேவின் மூன்று வருட கால பிரதமர் பதவியை விளக்குகிறது.

அவரின் தீவிரமான விமர்சகர்கள் கூட, ப்ரஸல்ஸ் பேச்சுவார்த்தை மற்றும் நாடாளுமன்றம் கொடுத்த அவமானங்களை கடந்துவந்த தெரசா மேயின் திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது.

நாடாளுமன்றத்தில் அமைச்சர்களின் பதவி விலகல் மற்றும் நாடாளுமன்றத்தில் எழுந்த எதிர்ப்பலைகள் அவருக்கு பின்னடைவை வழங்கியது.கடினமான சூழ்நிலையிலும், தன்னைச் சுற்றி ஏற்பட்டிருந்த குழப்பத்தை கண்டுகொள்ளாமல், நாடாளுமன்றம் மற்றும் தனது கட்சியில் அதிகாரத்தை இழந்தாலும், தனது எம்பிக்களிடம் "எதுவும் மாறவில்லை" என்று தெரிவித்தும், பிரிட்டன் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார்.

அவர் 2017ஆம் ஆண்டு பொது தேர்தலில் அவர் வெற்றிப் பெற்றிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும்.ஆனால் பிரதமர் அலுவலகத்துக்கு வெற்றியுடன் வர வேண்டிய அவர், தனது எம்பிகளின் ஆதரவை இழந்து, வட அயர்லாந்தின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் ஆதரவை நோக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

வாக்களிக்க ஒப்புக் கொள்ளும் விதமான ஒரு ஒப்பந்தம் உருவாகும் வரைதான் மே பதவியில் இருக்க வேண்டும் என்று தனது கட்சியினர் விரும்பினர் என்ற அந்த நிலை ஏற்படுத்திய காயத்தில் இருந்து அவர் மீளவில்லை.ஒரு தருணத்தில் தன் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க தனது கட்சியின் எம்பிக்களின் ஆதரவை பெற அடுத்த 2022ஆம் ஆண்டு தேர்தலுக்குள் தான் பதவி விலகுவதாக உறுதியளிக்க வேண்டியிருந்தது.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு பல எம்.பிகள் முட்டுக் கட்டை போடுகிறார்கள் என்று குற்றம் சுமத்தி அவர்களை தள்ளி வைத்த அவருக்கு, அவரின் கன்சர்வேடிவ் கட்சிஅவர் பதவியில் தொடர்வதை விரும்பவில்லை என்று ஒப்புக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.பிரஸல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தான் உருவாக்கிய ஐரொப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்காக ஒப்பந்தத்தை ஆதரித்தால் தான் பதவி விலகுவதாக அறிவித்தார்.ஆனால் அவரால் நாடாளுமன்றத்தில் அந்த வரைவுக்கு ஒப்புதலை பெற முடியவில்லை.ஜனவரி 2019 போது வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அவரின் ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் நிராகரித்தது.

நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற முயற்சி செய்தார். ஆனால் இரண்டு முறையும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக விரும்பாதவர்கள் அந்த ஒப்பந்தம் மிகவும் கடினமானதாக உள்ளது என்றனர். கடும்போக்கு கன்சர்வேடிவ் கட்சியினர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முழுமையாக வெளிவர இது போதுமானதாக இருக்காது என்று தெரிவித்தனர்.

போரிஸ்  ஜான்சன்

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகும் திட்டத்தை அக்டோபர் 31ம் தேதிக்குள் நிறைவேற்றவில்லை எனில் உயிரை விட தயார் என அந்நாட்டு பிரதமர் போரிஸ்  ஜான்சன் கூறியுள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகும் திட்டம் பிரெக்சிட் என்று அழைக்கப்படுகிறது. ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்சிட் நிறைவேற்றுவதற்கு தேவையான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு பிரிட்டன் அரசு எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. எனவே பிரெக்சிட்டை பிரிட்டன் நாடாளுமன்றம் அதன் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.

இந்நிலையில்  அக்டோபர் 31ம் தேதியோடு  ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறவில்லை எனில் உயிரை விடவும் தயார் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்து நாடாளுமன்ற ஒப்புதலை பெற பல முறை ஓட்டெடுப்பு நடைபெற்றது. ஆனால் அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு அதில் தோல்வி அடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார்.பதவியேற்று சில மாதங்களுக்கு உள்ளாக பிரெக்சிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,'பிரெக்சிட் நிறைவேற்றப்படும்.இல்லையெனில் நான் உயிரைவிடவும் தயாராக உள்ளேன். எனது அரசை நம்புவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மறுப்பு தெரிவிக்கிறார். பிரெக்சிட் நிகழ்வதற்கு முன்பு தேர்தல் நடத்த நான் தயாராக உள்ளேன். நாடாளுமன்றத்தில் இதுபற்றி 5 முறை பதில் கூறிவிட்டேன். அக்டோபர் 15ம் தேதி தேர்தல் நடத்த தயாராக உள்ளேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com