முந்தைய பான்சென் லாமாக்களின் இலக்கியத் தொகுப்பு வெளியீடு!

சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ரி கா சே என்ற நகரில் செப்டம்பர் 4-ம் தேதி சீனப் பண்பாட்டுக் களஞ்சியத்தின் திபெத் பிரிவில் முந்தைய பான்சென் லாமாக்களின் இலக்கியத் தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெற்ற
முந்தைய பான்சென் லாமாக்களின் இலக்கியத் தொகுப்பு வெளியீடு!

சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ரி கா சே என்ற நகரில் செப்டம்பர் 4-ம் தேதி சீனப் பண்பாட்டுக் களஞ்சியத்தின் திபெத் பிரிவில் முந்தைய பான்சென் லாமாக்களின் இலக்கியத் தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது. 

இவ்விழாவில், 11-வது பான்சென் லாமா எர்தினி கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில், திபெத் மரபுவழி புத்தமதத்தின் நாடு மற்றும் மதப்பற்று கொண்ட முன்னோர்களை முன்மாதிரியாகக் கொண்டு, கம்யூனிஸ்ட் கட்சி, தாய்நாடு ஆகியவற்றின் மீது நன்றி உணர்வுகொண்டு, பொதுமக்களுக்கு நலன்களையும் இன்ப வாழ்க்கையையும் உருவாக்கித் தர வேண்டும் என்று தெரிவித்தார். 

சீனப் பண்பாட்டுக் களஞ்சியத்தின் திபெத் பிரிவில், 36 தொகுப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், மொத்தம் ஆயிரத்துக்கு மேலான தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன வானொலி தமிழ்ப்பிரிவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com