உலக முதலீட்டின் முக்கிய நாடாகத் திகழும் சீனா!

​2019 ஆம் ஆண்டுக்கான சியாமென் சர்வதேச முதலீட்டு வர்த்தக பொருட்காட்சி சியாமென்னில் தொடங்கியுள்ளது.
உலக முதலீட்டின் முக்கிய நாடாகத் திகழும் சீனா!


2019 ஆம் ஆண்டுக்கான சியாமென் சர்வதேச முதலீட்டு வர்த்தக பொருட்காட்சி சியாமென்னில் தொடங்கியுள்ளது. இப்பொருட்காட்சியின் ஒரு பகுதியான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை வேளாண் உற்பத்திப் பொருட்கள் பொருட்காட்சியில் செப்டம்பர் 8 ஆம் நாள், கையொப்பமிடப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு ஒப்பந்தங்களின் நிதி தொகை 2950 கோடி அமெரிக்க டாலரை எட்டியது.

ஐ.நா வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அமைப்பு வெளியிட்ட 2019 ஆம் ஆண்டு உலக முதலீட்டு அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டு, உலகில் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களின் நேரடியான முதலீடு தொடர்ந்து 3 ஆண்டுகளாக குறைந்து வரும் நிலையில், சீனாவின் பொருளாதார ஈர்ப்பு ஆற்றல் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

அமெரிக்கா கிளப்பிய வர்த்தக சர்ச்சை உலக பொருளாதாரத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்திய போதிலும், முதலீட்டு சூழல் உள்ளிட்ட பல மேம்பாடுகளைக் கொண்டு சீனா உலக முதலீட்டின் முக்கிய நாடாகத் திகழ்ந்து வருகின்றது.

தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com