சுடச்சுட

    

    இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அமெரிக்க உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம்

    By DIN  |   Published on : 11th September 2019 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    indian


    அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நகர நீதிபதியான அனுராக் சிங்காலை ஃபுளோரிடா மாகாணத்தின் தெற்கு மாவட்ட உயர்நீதிமன்ற நீதிபதியாக அதிபர் டிரம்ப் நியமித்தார்.
    சிங்கால் உள்ளிட்ட 17 நீதிபதிகளை நியமித்த உத்தரவை அதிபர் மாளிகை, அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையான செனட்டிற்கு அனுப்பி வைத்தது. இந்த நியமனங்களுக்கு செனட் ஒப்புதல் அளித்ததும் இந்த 17 பேரும் மாவட்ட நீதிபதிகளாகப் பொறுப்பேற்பார்கள். 
    ஃபுளோரிடா மாகாணத்தின் தெற்கு மாவட்ட நீதிபதி பதவிக்கு நியமிக்கப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதலாமவர் சிங்கால் ஆவார். அவர் தற்போதைய நீதிபதியான ஜேம்ஸ் ஐ.கோனுக்குப் பதிலாக அந்த இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
    சிங்கால் தற்போது ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள புரோவர்டு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். அவர் அப்பதவியில் கடந்த 2011இல் அப்போதைய ஆளுநர் ரிக் ஸ்காட்டால் நியமிக்கப்பட்டார். அதற்கு முன் அவர் ஃபோர்ட் லாடர்டேல் நகரில் விசாரணை நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
    முன்னதாக, அமெரிக்காவின் ரைஸ் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்ற சிங்கால், வேக் ஃபாரஸ்ட் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai