சுடச்சுட

  

  கூடுதல் சுங்க வரியிலிருந்து விலக்குப் பெறும் அமெரிக்க பொருட்களின் பெயர்ப் பட்டியல்: சீனா வெளியீடு

  By DIN  |   Published on : 11th September 2019 05:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tax

  கோப்புப்படம்


  கூடுதல் சுங்க வரியிலிருந்து முதல் சுற்று விலக்கு பெறுவதற்குரிய முதல் தொகுதி அமெரிக்கப் பொருட்களின் பெயர்ப்பட்டியலை சீனா இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது.

  இந்தப் பொருட்களுக்கான வரிவிலக்கு 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் நடைமுறையில் இருக்கும். அமெரிக்கா வர்த்தக சர்ச்சையை கிளப்பிய பின், கூடுதல் சுங்க வரியிலிருந்து முதல் சுற்று விலக்கு பெறுவதற்குரிய பெயர்ப்பட்டியலைச் சீனா வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.

  சீனாவிலுள்ள தொழில் நிறுவனங்களுக்கான பாதிப்பை குறைப்பது என்பது இதன் முக்கிய நோக்கமாகும். சீனா கட்டுப்பாடு மற்றும் தெளிந்த சிந்தனையுடன் செயல்பட்டு வருகின்றது என்பதை இது வெளிக்காட்டுகிறது.

  கடந்த மார்ச் திங்களில், சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தகச் சர்ச்சை எழுந்த பின், பல்வேறு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சீனா மதிப்பிட்டு வருகின்றது. அந்நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை குறைக்கும் வகையில் பல்வேறு நிதி கொள்கைகள் மற்றும் இறக்குமதி கட்டமைப்பை மேம்படுத்துவதன் முலம் உதவி வழங்கி வருகின்றது.

  அக்டோபர் திங்கள் துவக்கத்தில், 13ஆவது சுற்று சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக உயர் நிலை பேச்சுவார்த்தையை அமெரிக்காவில் நடத்துவது என்று இரு தரப்பும் தீர்மானித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  தகவல்: சீன வானொலி தமிழ்ப்பிரிவு

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai