அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய  42,000 பேர் வெளியேற்றம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய  மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த 42,000 பேர் இந்த மாதத் தொடக்கத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.


அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய  மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த 42,000 பேர் இந்த மாதத் தொடக்கத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புத் துறை ஆணையர் மார்க் மோர்கன்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டவிரோதமாகவோ, உரிய ஆவணங்களோ இல்லாமல் அமெரிக்காவில் நுழைந்தால், திருப்பி அனுப்பிவிடுவோம் என்பதில் அதிபர் டிரம்ப் உறுதியாக உள்ளார்.  சட்டவிரோத குடியேற்ற தடுப்புக் கொள்கையின் படி, எவ்வித ஆவணங்களும் இல்லாமல், அமெரிக்காவில் தங்கியிருந்த மெக்ஸிகோவைச் சேர்ந்த மக்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். செப்டம்பர் 1ஆம் தேதி வரை 42, 000 பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு மெக்ஸிகோ அரசை வலியுறுத்தியுள்ளோம்.
அதையேற்ற அந்நாட்டு அரசு, மெக்ஸிகோவில் அவர்கள் தங்கும் வரை தேவையான பாதுகாப்பை வழங்குவதாக கூறியுள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், உரிய ஆவணங்கள் பெற்ற பின்னர் மீண்டும் இங்கு குடியேறலாம்.
இதுவரை சட்டவிரோதக் குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதில் மெக்ஸிகோ அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எனினும், அந்நாடு மேலும் முயற்சியெடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். 
அமெரிக்காவின் சட்ட திட்டங்களை குடியேற்றக்காரர்கள் தவறாகப் பயன்படுத்துவதை சட்டவிரோத குடியேற்ற தடுப்புக் கொள்கை தடுக்கிறது. இந்தக் கொள்கை இருப்பதால், நாட்டின் தென்மேற்கு எல்லையில், மற்ற பகுதிகளை விட குறைவான வீரர்களே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி, வேலை செய்பவர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குடியேற்ற தடுப்புக் கொள்கையில் எங்களுடன் இணைந்து மெக்ஸிகோ பணியாற்ற வேண்டும். அமெரிக்கா அளிக்கும் உளவுத் தகவல்களை கருத்தில் கொண்டு சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க மெக்ஸிகோ முன்வர வேண்டும் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com