சுடச்சுட

  

  அமெரிக்காவின் நல்லெண்ணத்தை சீனா வரவேற்கிறது: காவ்ஃபங்

  By DIN  |   Published on : 12th September 2019 08:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  US_and_China_flags


  சீன வணிகத் துறை அமைச்சகம்  இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தியது. அப்போது, சீன பொருட்களின் மீதான கூடுதல் சுங்க வரி வசூலிப்பை அமெரிக்கா ஒத்திவைத்துள்ளது குறித்து சீன வணிக துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் காவ் ஃபங் பேசுகையில், அமெரிக்காவின் நல்லெண்ணத்திற்கு சீனா வரவேற்பு தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார். 

  சீன அமெரிக்க பொருளாதார வர்த்தக குழுக்கள், விரைவில் சந்தித்து, 13ஆவது சுற்று சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக உயர் நிலை கலந்தாய்வுக்கு ஆயத்தம் செய்யும் என்று அவர் தெரிவித்தார். கலந்தாய்வின் அடிப்படை கோட்பாட்டில் மாற்றமில்லை எனத் தெரிவித்த அவர், சீனா, அமெரிக்கா இரு நாடுகளும் ஒரே திசையை நோக்கிப் பயணித்து, கலந்தாய்வுக்கு சீரான சூழலை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai