சுடச்சுட

  

  நல்லெண்ண நடவடிக்கைகளுடன் பேச்சுவார்த்தைக்கான சாதகமான சூழலை உருவாக்க வேண்டும்: சீனா

  By DIN  |   Published on : 12th September 2019 02:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  uschina

   

  பெய்ஜிங்: அக்டோபர் முதல் தேதியிலிருந்து, 25ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்களுக்கு கூடுதல் சுங்க வரி விதிக்கும் முடிவை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் செப்டம்பர் 11-ம் தேதி அறிவித்தார். முன்னதாக, அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் சுங்க வரி விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் முதல் தொகுதிப் பட்டியலை சீனா வெளியிட்டது.

  சீன - அமெரிக்க பொருளாதார வர்த்தகக் குழுத் தலைவர்கள் செப்டம்பர் 5-ம் தேதி தொலைபேசியில் தொடர்புகொண்னு பேசினர். அப்போது, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அக்டோபர் மாதம் 13-வது சீன-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.

  இந்த நிலையில், நடப்புப் பேச்சுவார்த்தைக்கு முன்பு, இரு தரப்பும் நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொண்டு, பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அடைவதற்கான சாதகமான சூழலை உருவாக்க பாடுபட்டு வருகின்றன. பன்னாட்டுச் சமூகத்தின் எதிர்பார்ப்புக்குப் பொருந்திய இத்தகைய முயற்சி,  பாராட்டத்தக்கது.

  உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் சீனா, அமெரிக்கா நாடுகளின் நலன்களும் ஆழமாக ஒன்றிணைந்துள்ளன. இருதரப்பு ஒத்துழைப்பு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.  இதற்காக, இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் கருத்துவேற்றுமைகளைக் களைந்து, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காண வேண்டும்.

  வர்த்தகப் போர் தீவிரமாகி வருவதை சீனா உறுதியுடன் எதிர்க்கிறது. இதைச் சமாளிக்க, இரு தரப்பும் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தி, பொதுக் கருத்துகளை அதிகரித்து, கூட்டு வெற்றிபெறும் நிலையில் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருளாதார வர்த்தக உடன்படிக்கையை எட்ட சீனா வரும்புகிறது. இத்தகைய விளைவு, சீனா, அமெரிக்கா, மற்றும் உலக நாடுகளுக்கு நன்மை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கும்.

  தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai