சுடச்சுட

  
  congo


  மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் வியாழக்கிழமை நேரிட்ட ரயில் விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.
  இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அந்த நாட்டு பேரிடர் மீட்பு விவகாரத் துறை அமைச்சர் ஸ்டீவ் பிகாயி தெரிவித்துள்ளதாவது: மீண்டும் ஒரு பெரும் விபத்தைச் சந்தித்துள்ளோம். மாயிபாரிடி பகுதி வழியாக சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்; ஏராளமானவர்கள் காயமடைந்தனர் என்று அந்த சுட்டுரைப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  காங்கோ ஜனநாயகக் குடியரசு ரயில்வே துறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக மோசமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுகிறது.
  கடந்த மார்ச் மாதம், கேசாய் என்னுமிடத்தில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயரிழந்தது நினைவுகூரத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai