சுடச்சுட

  

  பூமியைப் போன்ற மற்றொரு கிரகத்தில் நீர்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  By DIN  |   Published on : 13th September 2019 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  new planet discovered


  பூமியைப் போலவே தட்பவெப்ப நிலையைக் கொண்ட மற்றொரு கிரகமான கே2-18பி-யில் நீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
  இதுகுறித்து நேச்சர் அஸ்ட்ரானமி அறிவியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
  பூமியிலிருந்து 110 ஒளிவருட தூரத்தில் இருக்கும் கே2-18பி என்ற கிரகம், பூமியைப் போல் 8 மடங்கு பெரிதானது. 
  இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களிலேயே, உயிரினங்கள் வசிப்பதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலையைக் கொண்டுள்ள, பூமி அல்லாத ஒரே கிரகம் இதுவாகும்.
  கே2-18 என்ற நட்சத்திரத்தைச் சுற்றி வரும் அந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், மற்றும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கல தொலைநோக்கிகள் கண்டறிந்துள்ளன.
  அந்த நீரும் திரவ வடிவில் இருப்பதற்குத் தகுந்த தொலைவில் தனது நட்சத்திரத்தை கே2-18பி கிரகம் சுற்றி வருகிறது. அந்த வகையில், மனிதர்கள் வசிப்பதற்குத் தேவையான திரவ நிலை நீரைக் கொண்டிருக்கக் கூடிய, பூமி அல்லாத ஒரே கிரகம் கே2-18பி என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
  மனிதர்களை வேற்று கிரகத்தில் குடியேற்றுவதற்கான ஆய்வில், இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமான திருப்புமுனையாகும் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai