சுடச்சுட

  

  நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் சீனாவின் நடவடிக்கைகள்

  By DIN  |   Published on : 13th September 2019 05:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  us-china

  கோப்புப் படம்

   

  சந்தை மயமாக்க கோட்பாட்டையும், உலக வர்த்தக அமைப்பின் வரையறையையும் பின்பற்றி, தொடர்புடைய தொழில் நிறுவனங்கள் அமெரிக்காவிலிருந்து சோயா, அவரை போன்ற வேளாண் பொருட்கள் மற்றும் பன்றி இறைச்சி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்கு சீன அரசு ஆதரவு அளித்து வருகின்றது. 

  இந்த இறக்குமதிப் பொருட்களுக்கு, கூடுதல் சுங்க வரி வசூலிப்பிலிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை சீனாவின் நல்லெண்ணத்தை வெளிக்காட்டுவதோடு, பிரச்சினையைத் தீர்ப்பதற்கான விருப்பத்தையும் உணர்த்துகிறது.

  கடந்த 2 நாட்களில், கூடுதல் சுங்க வரி வசூலிப்புக்குரிய அமெரிக்கப் பொருட்களின் பெயர் பட்டியலில், விலக்கு அளிக்கப்படும் முதல் தொகுதி பொருட்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனையடுத்து அக்டோபர் முதல் நாள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் மீது வசூலிக்க விருந்த கூடுதல் சுங்க வரியை அமெரிக்கா ஒத்திவைத்துள்ளது. 

  இந்த நடவடிக்கைகள், இரு நாடுகளும், பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரே திசையில் கூட்டாக கவனம் செலுத்துவதைக் காட்டுகிறது. மேலும் நடைபெறவுள்ள 13-ஆவது சுற்று சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக உயர்நிலை கலந்தாய்வுக்கு சீரான நிபந்தனையை இவை உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai