சுடச்சுட

  

  சோவியத்துக்கு எதிராக ஜிஹாதிகளாக செயல்பட தான் முஜாஹுதீன்களை பாகிஸ்தான் உருவாக்கியது: இம்ரான் கான்

  By ANI  |   Published on : 13th September 2019 09:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Pakistans_Prime_Minister_Imran_Khan

  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் | கோப்புப் படம்

   

  80-களில் ஆப்கானிஸ்தானில் உள்ள சோவியத்துக்கு எதிராக ஜிஹாதிகளாக செயல்படுவதற்கு தான் பாகிஸ்தான் முஜாஹுதீன்களை உருவாக்கியது என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

  80-களில் ஆப்கானிஸ்தானில் உள்ள சோவியத்துக்கு எதிராக ஜிஹாதிகளாக செயல்படுவதற்கு தான் பாகிஸ்தான் முஜாஹுதீன்களை உருவாக்கியது. இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் நிதியுதவியுடன், சிஐஏ-வின் வழிகாட்டுதலின்படி பாகிஸ்தானால் தயார் செய்யப்பட்டவர்கள். ஆனால், தற்போது அதே அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ளது.

  இந்நிலையில், அமெரிக்காவின் வரவால் அதே முஜாஹுதீன்களை பாகிஸ்தானில் உள்ள சில குழுக்களே ஜிஹாதிகள் அல்ல பயங்கரவாதிகள் என்று கூறி வருகிறது. இது மிகப்பெரிய முரணாக இருந்தாலும், இவ்விவகாரத்தில் பாகிஸ்தான் நடுநிலையாக செயல்பட வேண்டும். ஏனென்றால் இதே குழுக்கள் தான் பாகிஸ்தான் எதிராகவும் செயல்பட்டு வருகிறது.

  இதனால் பாகிஸ்தானில் 70,000 பேரை இழந்துள்ளோம், 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தனைக்கும் மத்தியில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை. அதற்கு மாறாக அதன் மொத்தப் பழியும் பாகிஸ்தான் மீது விழுந்துவிட்டது.

  தேவையற்ற இதுபோன்ற அவப்பெயர் பாகிஸ்தான் மீது இழைக்கப்பட்ட அநீதியாகும் என்று தெரிவித்தார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai