மேற்குக் கரை பகுதியை இஸ்ரேலுடன் இணைப்பது சட்டவிரோதம்

மேற்குக் கரையிலுள்ள ஜோர்டான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைக்கும் அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் யோசனை சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரானது என்று ஐ.நா. பொதுச் செயலர்
மேற்குக் கரை பகுதியை இஸ்ரேலுடன் இணைப்பது சட்டவிரோதம்


மேற்குக் கரையிலுள்ள ஜோர்டான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைக்கும் அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் யோசனை சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரானது என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் துஜாரிக் மூலம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
இஸ்ரேல் தேர்தலில் வெற்றி பெற்றால் மேற்குக் கரை பகுதியிலுள்ள ஜோர்டான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைக்கப் போவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பு செயல்படுத்தப்பட்டால், அது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும். பாலஸ்தீனப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையை அந்த நடவடிக்கை அடியோடு அழித்துவிடும். மேலும், பிராந்திய அமைதியையும் குலைத்துவிடும்.
இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தனித்தனி நாடுகளாக நீடித்திருக்கும் இருதேசத் தீர்வு எட்டாக் கனியாகிவிடும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் நெதன்யாகு மீண்டும் போட்டியிடுகிறார்.
அந்தத் தேர்தலில் வெற்றியடைந்தால், ஏற்கெனவே இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரைப் பகுதியின் ஜோர்டான் பள்ளத்தாக்கை அந்த நாட்டுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப் போவதாக நெதன்யாகு கடந்த செவ்வாய்க்கிழமை வாக்குறுதி அளித்தார்.
பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்புக்கு, சவூதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com