சீனாவின் மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் வளர்ச்சி

பெரும் வளைகுடா பகுதியின் வளர்ச்சி வாய்ப்பைப் பயன்படுத்துவது ஆகிய பிரச்சினைகள் குறித்து சீன ஊடகக் குழுமத்திற்கு பேட்டி அளித்தார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சீனாவின் மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் 5ஆவது நிர்வாக அதிகாரி ஹொ லெத் செங், அண்மையில்,  ஒரு நாட்டில் இரு அமைப்பு முறைகள் என்ற கொள்கை, பெரும் வளைகுடா பகுதியின் வளர்ச்சி வாய்ப்பைப் பயன்படுத்துவது ஆகிய பிரச்சினைகள் குறித்து சீன ஊடகக் குழுமத்திற்கு பேட்டி அளித்தார்.

ஒரு நாடு என்ற கருத்தை அடிப்படையில் வைக்க வேண்டும். ஒரு நாடு என்ற கருத்தை கவனத்தில் கொள்ளாமல், இரு அமைப்பு முறைகள் என்ற கொள்கையை மேற்கொள்ள கூடாது. ஒரு நாடு என்ற கொள்கை முன் நிபந்தனையாகும். அரசியல் அமைப்பு சட்டம், மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் அடிப்படை சட்டத்திற்கு உரிய அதிகாரம் கொடுத்துள்ளது. அடிப்படை சட்டம், நிர்வாகம், சட்டமியற்றல், நீதி ஆகிய உரிமைகளை எங்களுக்கு கொடுத்துள்ளது என்று ஒரு நாட்டில் இரு அமைப்பு முறைகள் நடைமுறையாக்கம் குறித்து ஹோ லெத் செங் வலியுறுத்தினார்.

மக்கௌவின் நபர்வாரி வருமானம், உள் நாட்டு உற்பத்தி மதிப்பு ஆகியவை சீனாவில் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றது. மாக்கௌவின் சுற்றுலா துறை சீராக வளர்ந்து வருகின்றது. நடுவண் அரசு மற்றும் சீனப் பெருநிலப்பகுதி பொது மக்களின் ஆதரவு ஆகியவற்றின் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது என்று ஹோ லெத் சங் தெரிவித்தார்.

பெரும் வளைகுடா பகுதியில், குவாங் துங் மாநிலத்தின் 9 நகரங்கள், ஹாங்காங், மக்கௌ என மொத்தமாக 11 நகரங்கள் உள்ளன. இதனால், பெரும் வளைகுடா பகுதி, கூட்டாக வளர வேண்டும். 11 நகரங்களுக்கிடையில் எவ்விதப் போட்டியுமில்லை என்று அவர் தேர்தலின் போது தெரிவித்தார்.

தற்போது மக்கௌவில் வீட்டு விலை, சதுரமீட்டருக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் யுவானை எட்டியுள்ளது. நபர்வாரி வருமானம் இருபதாயிரம் யுவானைத் தாண்டிய போதிலும், வீடு வாங்குவது என்பது மிகக் கடினமானதாகவே இருக்கின்றது. இதனால், அரசு, வறுமையான மக்களுக்கு நிறைய வீடுகளைக் கட்டியமைத்துள்ளது. ஆனால், இளைஞர்கள் இந்த மாதிரியான வீடுகளில் தங்க விரும்பவில்லை. இதனால், இளைஞர்களின் வீட்டுப் பிரச்சினையை தீர்க்க மக்கௌ அரசு பாடுபடும் என்று அவர் தெரிவித்தார்.

மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேசம், தாய் நாட்டுக்குத் திரும்பிய 20 ஆண்டுகாலத்தில், பொருளாதார துறையில் நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளது. பொது மக்களின் வாழ்க்கை பெருமளவில் முன்னேறி வருகின்றது. அரசியல் துறையில் பொது மக்களின் தகுநிலை பெருமளவில் மாறியிருக்கிறது.

தாய் நாட்டுக்குத் திரும்பிய பிறகு, நடுவண் அரசு, மக்கௌ மக்களுக்கு தனியான கடவுச்சீட்டை வெளியிட்டுள்ளது. இதனால், மக்கௌவில் வாழும் மக்கள் சொந்த தகுநிலையை பெற்றுள்ளனர். இதைத் தவிர்த்து, மக்கௌ மக்கள், மக்கள் பேரவையின் பிரதிநிதியாகவும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக் கமிட்டியின் உறுப்பினராகவும், சீனாவின் விவகார விவாதத்தில் கலந்துகொண்டு வருகின்றனர். இவை முன்பு காணப்படாதவை என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com