தில்லியிலிருந்து செங்தூவுக்கு விமான சேவை: இன்டிகோ அறிவிப்பு

இந்தியாவின் கட்டணம் குறைவான விமான நிறுவனம் சீனாவின் பெருநிலப் பகுதியில் சேவையைத் தொடங்குவது இதுவே முதன்முறையாகும்.
இன்டிகோ விமானங்கள் | கோப்புப் படம்
இன்டிகோ விமானங்கள் | கோப்புப் படம்

புது தில்லிக்கும், சீன சிச்சுவான் மாநிலத் தலைநகர் செங்தூவுக்கும் இடையே நேரடி விமான சேவையை செப்டம்பர் 16 முதல் தொடங்குவதாக இன்டிகோ ஏர்லைன்ஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை இன்டிகோ நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி வில்லியம் பால்டர் செங்துவின்ஷுவங்லியு சர்வதேச விமான நிலையத்தில் வெளியிட்டார். இந்தியாவின் கட்டணம் குறைவான விமான நிறுவனம் சீனாவின் பெருநிலப் பகுதியில் சேவையைத் தொடங்குவது இதுவே முதன்முறையாகும். 

வேகமாக வளர்ந்து வரும் விமான நிறுவனமான இன்டிகோ, தற்போது தினமும் சுமார் 1,400 விமானங்களை இயக்கி வருகிறது. செங்துவைத் தொடர்ந்து சீனாவின் நகரங்களுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான விமான சேவையை அதிகப்படுத்தவும் இன்டிகோ திட்டமிட்டுள்ளது.

சீனப் பயணியர் விமானப் பணியகம் 2018ஆம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, சீனாவில் மொத்தம் 235 விமான நிலையங்கள் உள்ளன. இதில், 37 விமான நிலையங்களில் ஆண்டுதோறும் குறைந்தது 1 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர். விமானச் சேவையில் சீனா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2020-இன் நடுப்பகுதியில் சீனா முதலிடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com