2022-ல் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவோம்: பாகிஸ்தான் அமைச்சர்

2022-ல் விண்வெளிக்கு மனிதனை அனுப்பு திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபாவத் சௌத்ரி தெரிவித்தார். 
பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் சௌத்ரி | கோப்புப் படம்
பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் சௌத்ரி | கோப்புப் படம்

2022-ல் விண்வெளிக்கு மனிதனை அனுப்பு திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபாவத் சௌத்ரி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

சீனாவுடன் இணைந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அவ்வகையில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர் 2022-ல் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்படுவார். இதற்கான நபரை தேர்வு செய்யும் பணி 2020-ல் தொடங்கப்பட உள்ளது. 

இதில் முதல்கட்டமாக 50 நபர்களை தேர்வு செய்து பின்னர் 25 நபர்களாகக் குறைக்கப்படுவார்கள். இதிலிருந்து சரியான ஒருவர் தேர்வு செய்யப்பட்டு விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்படுவார். 

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்த திட்டத்தில் பாகிஸ்தான் விமானப் படை முக்கியப் பங்காற்ற உள்ளது என்று தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com