Enable Javscript for better performance
சவூதி எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் மீது குற்றம்சாட்டக் கூடாது: சீனா- Dinamani

சுடச்சுட

    

    சவூதி எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் மீது குற்றம்சாட்டக் கூடாது: சீனா

    By DIN  |   Published on : 17th September 2019 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    clash

    சவூதி அரேபிய எண்ணெய் ஆலைகளில் சனிக்கிழமை நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் தொடர்பாக உரிய ஆதாரங்கள் இல்லாமல் ஈரான் மீது குற்றம்சாட்டக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.
    இந்தத் தாக்குதலுக்கு யேமன் கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்ற போதிலும், ஈரான்தான் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது.
    இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "சவூதி அரேபியாவிலுள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்திய ஆளில்லா விமானங்கள் யேமனிலிருந்து சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை. உலக எண்ணெய் விநியோக கட்டமைப்பின் மீது ஈரான்தான் இதுவரை இல்லாத வகையில் தாக்குதல் நடத்தியிருக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தார். 
    ஆனால், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் கண்மூடித்தனமானவை என்று ஈரான் தெரிவித்தது. 
    இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனியிங், பெய்ஜிங்கில் திங்கள்கிழமை கூறியதாவது: சவூதி எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை முடிவுகள் எதுவும் இல்லாதபோது, எந்த நாட்டின் மீதும் குற்றம்சாட்டுவது நியாயமற்றது. பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய எந்தச் செயலையும் ஏற்க முடியாது என்ற நிலைப்பாட்டில் சீனா உறுதியாக உள்ளது. அதுபோன்ற செயல்களில் எந்தத் தரப்பினரும் ஈடுபடாமல், கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai