சவூதி எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் மீது குற்றம்சாட்டக் கூடாது: சீனா

சவூதி அரேபிய எண்ணெய் ஆலைகளில் சனிக்கிழமை நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் தொடர்பாக உரிய ஆதாரங்கள் இல்லாமல் ஈரான் மீது குற்றம்சாட்டக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.
சவூதி எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு ஈரான் மீது குற்றம்சாட்டக் கூடாது: சீனா

சவூதி அரேபிய எண்ணெய் ஆலைகளில் சனிக்கிழமை நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் தொடர்பாக உரிய ஆதாரங்கள் இல்லாமல் ஈரான் மீது குற்றம்சாட்டக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு யேமன் கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்ற போதிலும், ஈரான்தான் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "சவூதி அரேபியாவிலுள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்திய ஆளில்லா விமானங்கள் யேமனிலிருந்து சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை. உலக எண்ணெய் விநியோக கட்டமைப்பின் மீது ஈரான்தான் இதுவரை இல்லாத வகையில் தாக்குதல் நடத்தியிருக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தார். 
ஆனால், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் கண்மூடித்தனமானவை என்று ஈரான் தெரிவித்தது. 
இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனியிங், பெய்ஜிங்கில் திங்கள்கிழமை கூறியதாவது: சவூதி எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை முடிவுகள் எதுவும் இல்லாதபோது, எந்த நாட்டின் மீதும் குற்றம்சாட்டுவது நியாயமற்றது. பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய எந்தச் செயலையும் ஏற்க முடியாது என்ற நிலைப்பாட்டில் சீனா உறுதியாக உள்ளது. அதுபோன்ற செயல்களில் எந்தத் தரப்பினரும் ஈடுபடாமல், கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com