சவூதியை எச்சரிக்கவே எண்ணெய் ஆலை மீது தாக்குதல்: ஈரான்

சவூதி அரேபியாவுடன் மிகப் பெரிய போரில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை செய்யவே அந்த நாட்டின் எண்ணெய் ஆலைகள் மீது யேமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி
சவூதியை எச்சரிக்கவே எண்ணெய் ஆலை மீது தாக்குதல்: ஈரான்


சவூதி அரேபியாவுடன் மிகப் பெரிய போரில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை செய்யவே அந்த நாட்டின் எண்ணெய் ஆலைகள் மீது யேமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை கூறியதாவது:
யேமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவிலுள்ள மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தவில்லை. பள்ளிகளிலோ, சந்தைகளிலோ அவர்கள் தாக்குதல் நடத்தவில்லை.
அவர்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியகத்தில் மட்டும்தான் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


அந்த வகையில், அது வெறும் எச்சரிக்கைத் தாக்குதல்தான்.
அந்தப் பிராந்தியத்தில் மிகப் பெரிய போர் வெடிக்கும் என்ற எச்சரிக்கையை விடுப்பதற்காக ஹூதி கிளர்ச்சியாளர்கள் அந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றார் அவர்.
சவூதி அரேபியாவின் அப்காய்க் பகுதியிலுள்ள கச்சா எண்ணெய் ஆலையிலும், குராயிஸ் பகுதியிலுள்ள எண்ணெய் வயலிலும் ஆளில்லா விமானங்கள் மூலம் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அந்த ஆலைகளில் தீப்பிடித்தது.
இந்தத் தாக்குதலுக்கு யேமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
யேமனில் தங்கள் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை நடத்தி வரும் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். எனினும், அந்தத் தாக்குதலை ஈரான்தான்  நடத்தியது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com