மகாத்மா காந்தியின் பொன்மொழியை குறிப்பிட்டு சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் பேச்சு

வளமான எதிர்காலத்துக்காக தெற்காசிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறிய சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் ஜோஸ்பின் தியோ, உன்னுடைய எதிர்காலம் என்பது உன்னுடைய
மகாத்மா காந்தியின் பொன்மொழியை குறிப்பிட்டு சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் பேச்சு


வளமான எதிர்காலத்துக்காக தெற்காசிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறிய சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் ஜோஸ்பின் தியோ, உன்னுடைய எதிர்காலம் என்பது உன்னுடைய இன்றைய செயலைச் சார்ந்துதான் உள்ளது என்று மகாத்மா காந்தி கூறிய பொன்மொழியை குறிப்பிட்டுப் பேசினார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் சார்பில் தெற்காசியாவின் வளர்ச்சி குறித்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்று ஜோஸ்பின் தியோ பேசியதாவது:
தெற்காசியாவின் வளமான எதிர்காலத்துக்காக, இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நமது அனைவரது எதிர்காலமும் நமது இன்றைய செயல்களிலேயே உள்ளது. உன்னுடைய எதிர்காலம் என்பது உன்னுடைய இன்றையச் செயலை சார்ந்துதான் உள்ளது என்று மகாத்மா காந்தி கூறியதை நினைவில் கொண்டு, நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
சிங்கப்பூரில் பல மொழிகளைப் பேசும், பல கலாசாரங்களைக் கொண்ட, பல மதங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். இங்குள்ள 50 லட்சம் பேரில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்களும், சீனாவைச் சேர்ந்தவர்களும்தான். 
தொடக்க காலத்தில், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தவர் நாராயணப் பிள்ளை. அவர் ஆரம்பத்தில் அலுவலக எழுத்தராகப் பணியாற்றினார். பிறகு தொழிலதிபரானார். அதன் பின்னர், ஒரு இனத்தின் தலைவராக போற்றப்பட்டார். சிங்கப்பூரின் முதல் ஹிந்துக் கோயிலாக, மாரியம்மன் கோயிலை அவர் கட்டினார். அந்தக் கோயில் நாட்டின் பழமையான கோயிலாக இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது.
இங்கு மக்களிடையே கலாசார வேறுபாடுகள் இருந்தாலும், ஒரு நாட்டு மக்களாகவே அனைவரும் வாழ்கின்றனர். அதுபோல, அனைத்து தெற்காசிய நாடுகளும் மற்ற நாடுகளின் கலாசாரத்தை, மக்களை மதித்து நடக்க வேண்டும். நமது எதிர்காலத்துக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார் ஜோஸ்பின் தியோ.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com