நவ சீனாவில் பெண்களின் உரிமை அதிகரிப்பு

கடந்த 70 ஆண்டுகாலத்தில், சீனா, வறுமையிலிருந்து வலிமைமிக்கதாக வளர்ந்த போக்கில், சீனாவின் பெண் லட்சியம் முன்பு கண்டிராத சாதனைகளைப் பெற்றுள்ளது.
நவ சீனாவில் பெண்களின் உரிமை அதிகரிப்பு

சமநிலை வளர்ச்சி கூட்டு பகிர்வு மற்றும் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டுகாலத்தில் பெண் இலட்சியத்தின் வளர்ச்சியும் முன்னேற்றமும் என்ற வெள்ளையறிக்கை ஒன்றை சீனா வெளியிட்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகாலத்தில், சீனா, வறுமையிலிருந்து வலிமைமிக்கதாக வளர்ந்த போக்கில், சீனாவின் பெண் லட்சியம் முன்பு கண்டிராத சாதனைகளைப் பெற்றுள்ளது. பெண்களின் அரசியல் தகுநிலை உயர்ந்துள்ளது. பெண்களின் நல்வாழ்வு மற்றும் கல்வி பெறும் உரிமைகள் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளன. பெண்களின் ஆற்றல் வெளிகொணரப்பட்டுள்ளது. பெண்களின் இன்ப உணர்வும் பாதுகாப்பு உணர்வும் பெருமளவில் அதிகரித்துள்ளன என்று இவ்வெள்ளையறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் உரிமையும் ஆண்களின் உரிமையும் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதில் சீன அரசு கவனம் செலுத்தி வருகின்றது. தேர்ந்தெடுக்கும் உரிமை, தேர்ந்தெடுக்கப்படும் உரிமை, தேசிய விவகார நிர்வாக உரிமை ஆகியவற்றில், ஆண்களும் பெண்களும் சமநிலை உரிமை பெறுவது, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட துவக்கக் காலத்தில் சட்டமாக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில், தேசிய நிர்வாக அமைப்பு முறை மற்றும் நிர்வாக ஆற்றலின் நவீனமயமாக்கத்தை முன்னேற்றும் போக்கில், பெண்கள், தேசிய மற்றும் சமூக நிர்வாக பணியில் கலந்துகொள்ளும் நிலை பன்முகங்களிலும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அரசு சார் நிறுவனங்களில் 22.2 விழுக்காடான தலைவர்கள், பெண்களாவர். சீன கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது தேசிய மாநாட்டின் பிரதிநிதிகளில், பெண்களின் விகிதம் சுமார் 25 விழுக்காடு ஆகும். அடிப்படை நிலை சமூக நிர்வாகப் பணியில் பெண்களின் விகிதம் இன்னும் உயர்வாகும் என்று இவ்வெள்ளையறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 70 ஆண்டு காலத்தில், பெண்களும் ஆண்களும் சமநிலையில் அரசியல் உரிமையைப் பெற வேண்டும் என்ற கொள்கையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிலையாக நிற்கிறது. பெண்களின் விடுதலையையும் பெண்களும் ஆண்களும் சமநிலை உரிமையையும் இலக்காக கொண்டு செயல்பட்டு பெண்களின் உரிமையைப் பேணிக்காக்கும் சட்டம் மற்றும் நீதி நடவடிக்கைகள் இடைவிடாமல் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்று சீன அரசவை மகளிர் மற்றும் குழந்தை பணி ஆணையத்தின் துணை தலைவரும் அனைத்து சீன மகளிர் சம்மேளனத்தின் துணை தலைவருமான ஹுவாங் சியாவ் வை தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வு, சமூக நல்வாழ்வுக்கான அடிப்படையாகும். இந்த இலட்சியத்தில் சீன அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வைப் பேணிக்காப்பதை, தேசிய நெடுநோக்கில் சீன அரசு சேர்த்துள்ளதாகவும் இவ்வெள்ளையறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:சீன வானொலி தமிழ்ப் பிரிவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com