நாடாளுமன்றம் முடக்கப்பட்ட விவகாரம்: பிரிட்டன் உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் தீர்ப்பு

பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது தொடர்பாகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.
நாடாளுமன்றம் முடக்கப்பட்ட விவகாரம்: பிரிட்டன் உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் தீர்ப்பு


பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது தொடர்பாகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.
இதுகுறித்து, மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற அந்த வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி பிரெண்டா ஹேல் கூறியதாவது: மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை கூடிய விரைவில் முடித்துவைக்க வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றம் உணர்ந்துள்ளது.
எனவே, இந்த வழக்கின் தீர்ப்பை அடுத்த வாரத் தொடக்கத்துக்குள் வெளியிடுவோம் என்று நம்புகிறோம் என அவர் அறிவித்தார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகிய (பிரெக்ஸிட்) பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே சிறப்பு வர்த்தக உறவை பேணுவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
அந்த ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட் நிறைவேறினால், அது பிரிட்டன் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்கும் எனக் கூறப்படும் நிலையில், அதற்கான அக்டோபர் 31-ஆம் தேதி காலக்கெடுவை நீட்டிக்க பெரும்பாலான எம்.பி.க்கள் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
எனினும், அந்த முயற்சியைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தை கடந்த 9-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 14-ஆம் தேதி வரை முடக்கிவைக்க பிரதமர் போரிஸ் ஜான்ஸன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த முடிவை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரெக்ஸிட் எதிர்ப்பு பிரசாரகர் ஜீனா மில்லர் தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை அடுத்த வாரத் தொடக்கத்தில் அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com