சீனாவில் இன்று அறுவடைத் திருவிழா

சீனாவின் 24 பருவ நாட்களில் ஒன்றான சியூ ஃபென் தினமாகும். இந்நாளில், சீன விவசாயிகள் அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடுவது வழக்கம். 
சீனாவில் இன்று அறுவடைத் திருவிழா

இவ்வாண்டின் செப்டம்பர் 23-ஆம் நாள், சீனாவின் 24 பருவ நாட்களில் ஒன்றான சியூ ஃபென் தினமாகும். இந்நாளில், சீன விவசாயிகள் அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடுவது வழக்கம். 

இதையொட்டி, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீன மத்தியத் தொலைக்காட்சி நிலையத்தின் வேளாண்மை மற்றும் கிராமப்புற அலைவரிசை வழியாக முழு நாட்டின் விவசாயிகளுக்கு உளமார நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

அதோடு, சீன மத்தியத் தொலைக்காட்சி நிலையத்தின் வேளாண்மை மற்றும் கிராமப்புறயின்அலைவரிசை சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டதற்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து உரையில் அவர் கூறுகையில்,

வசந்தகாலத்தில் விதைப்பதும் இலையுதிர்காலத்தில் அறுவடை செய்வதும் வழக்கம். உழைப்பாளர்கள், அதிகப்பயன்களைப் பெறுவது உறுதி என்று நம்புகின்றோம். வேளாண்மையில் சீரான அடிப்படை இருந்தால் தான் வளர்ச்சியின் இயக்காற்றலை அதிகரிக்க முடியும் என்று தெரிவித்தார்.

சீன மத்தியத் தொலைக்காட்சி நிலையத்தின் வேளாண்மை மற்றும் கிராமப்புற ஒளிப்பரப்பானது, வேளாண் துறை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட தேசிய நிலையிலான முதலாவது பல்லூடக ஒளிப்பரப்பாகும். செப்டம்பர் 23-ஆம் நாள் முதல் சேவையைத் தொடங்கியுள்ள இந்த ஒளிப்பரப்பு, நாள் ஒன்றுக்கு 18 மணிநேரம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும்.

தகவல்: சீன வானொலி தமிழ் பிரிவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com