பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எட்ட இன்னும் வாய்ப்புள்ளது

தங்களது அமைப்பிலிருந்து பிரிட்டன் விலகியதற்குப் பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே தொடர வேண்டிய சிறப்பு உறவு தொடர்பான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இன்னும் வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜீன்
பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எட்ட இன்னும் வாய்ப்புள்ளது

தங்களது அமைப்பிலிருந்து பிரிட்டன் விலகியதற்குப் பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே தொடர வேண்டிய சிறப்பு உறவு தொடர்பான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இன்னும் வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜீன்-கிளாட் ஜங்க்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பிரெக்ஸிட் தொடர்பாக பிரிட்டனில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பின்போது பொய் செய்திகள் பரப்பப்பட்டதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஐரோப்பிய யூனியன் இன்னும் அதிகமாக மேற்கொண்டிருக்கலாம். பிரெக்ஸிட்டுக்கான அக். 31-ஆம் தேதி கெடு நெருங்கி வரும் சூழலிலும், ஐரோப்பிய யூனியனும், பிரிட்டனும் அதுதொடர்பான ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com