சீனாவின் பங்குச் சந்தையில் பன்னாட்டு முதலீடு அதிகரிப்பு!

சீனாவில் ரென்மின்பி நாணயத்தால் கணிக்கிடும் ஏ வகையான பங்குகளை ‘S&P Emerging BMI’ எனும் முதலீட்டு முறைமையில் சேர்ப்பதற்கான S&P DJI நிறுவனத்தின் முடிவு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


சீனாவில் ரென்மின்பி நாணயத்தால் கணிக்கிடும் ஏ வகையான பங்குகளை ‘S&P Emerging BMI’ எனும் முதலீட்டு முறைமையில் சேர்ப்பதற்கான S&P DJI நிறுவனத்தின் முடிவு செப்டம்பர் 23 ஆம் நாள் திங்கள்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது. 

இதுவரை உலகளவில் மிக முக்கியமான 3 குறியீட்டு முதலீட்டு நிறுவனங்கள், சீனாவின் ஏ பங்குச் சந்தைக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கியுள்ளன. சீனாவின் மூலதனச் சந்தை மற்றும் சீனப் பொருளாதாரத்தின் ஈர்ப்பாற்றல் அதிகரித்து வருகிறது என்பதையும், ஏ பங்குச்சந்தையில் முதலீடு செய்வது மேலதிக சர்வதேச மூலதனங்களின் பொதுக் கருத்தாக மாறியுள்ளது என்பதையும் இது முழுமையாக நிரூபித்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட வளர்ந்த பொருளாதாரச் சமூகங்களின் நாணயக் கொள்கைகள் தளர்ச்சியடைந்து வரும் பின்னணியில், உலகின் முக்கிய பொருளாதாரச் சமூகங்களில் சீனா மட்டுமே தொடர்ந்து இயல்பான நாணயக் கொள்கையைச் செயல்படுத்தி வருகிறது.
 
ரென்மின்பி மூலம் கணக்கிடும் சொத்துகளின் மதிப்பு இன்னும் தாழ்ந்த நிலையில் உள்ளது. அதன் நிலைத்தன்மை மேலும் அதிகம். தண்ணீர் பள்ளத்தை நோக்கி பாய்ந்தோடுவது போல, உலகப்பணம் சீனாவுக்குள் கரை புரண்டு வருகிறது. இதனால்தான், சீனாவின் மூலதனச் சந்தையில் சர்வதேச மூலதனங்களின் வரவேற்பு அதிகரித்துள்ளது.

அதோடு, மூலதனச் சந்தையில் சீர்திருத்தத்தை சீனா முன்னேற்றி வருகிறது. சீன மூலதனச் சந்தையின் அருமையான எதிர்காலத்தை சர்வதேச மூலதனத்துக்கு வெளிக்காட்டும் அதே வேளை முதலீடு செய்வதற்கான நம்பிக்கையையும் இது வலுப்படுத்தியுள்ளது.

உலகப் பொருளாதாரம் பெரிய உறுதியற்ற காரணிகளை எதிர்நோக்கும் நிலையில், சீன மூலதனச் சந்தை பெரிய ஈர்ப்பாற்றலோடு, உலக மூலதனச் சந்தைக்கும் உலகப் பொருளாதாரத்துக்கும் நிலைத்தன்மையை உருவாக்கி வருகிறது. கூடிய விரைவில் சீனாவில் முதலீடு செய்யும் போக்கு சர்வதேச அளவில் அதிகரிக்கும்.

தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com