பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை விடுவித்தது ஈரான்

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பிடித்து வைத்திருந்த பிரிட்டன் எண்ணெய்க் கப்பலான ஸ்டெனா இம்பெராவை விடுவித்துவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை விடுவித்தது ஈரான்


ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பிடித்து வைத்திருந்த பிரிட்டன் எண்ணெய்க் கப்பலான ஸ்டெனா இம்பெராவை விடுவித்துவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதாரத் தடை விதித்துள்ளதை அடுத்து ஹோர்முஸ் நீரிணைப் பகுதி வழியாக செல்லும் எண்ணெய்க் கப்பல்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட சிரியா நாட்டு நிறுவனத்துக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் சென்றதாக ஈரானின் கிரேஸ்-1 கப்பலை ஸ்பெயின் கடல் பகுதியில் வைத்து பிரிட்டன் சிறைப் பிடித்தது.
இதையடுத்து, சர்வதேச விதிகளை மீறியதாகவும், தங்கள் நாட்டின் மீன் பிடிப் படகுகள் மீது மோதியதாகவும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் வைத்து பிரிட்டனின் ஸ்டெனா இம்பெரா எண்ணெய்க் கப்பலை ஈரான் கடந்த ஜூலை 19-ஆம் தேதி சிறைப்பிடித்தது. பின்னர் அந்தக் கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்துக்கு ஈரான் எடுத்துச் சென்றது.
இந்தக் கப்பலில் சீக்கியிருந்த இந்தியப் பணியாளர்களை பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஈரான் விடுவித்தது. எனினும், கப்பலை விடுவிக்காமல் இருந்தது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கப்பலை விடுவிக்க ஈரான் சம்மதித்தது. அதன்படி, அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிந்ததையடுத்து, தங்கள் நாடு விதித்த நிபந்தனைகள் ஏற்கப்பட்டதை அடுத்து, பிரிட்டனின் ஸ்டெனா இம்பெரா எண்ணெய்க் கப்பலை விடுவித்துவிட்டதாக ஈரான் அரசு செய்தித் தொடர்பாளர் அலி ரபீ டெஹ்ரானில் திங்கள்கிழமை அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com