காலநிலையை சமாளிப்பதில் ஆக்கப்பூர்வ சக்தியாக விளங்குகிறோம்: ஐ.நா. கூட்டத்தில் சீனா

ஐ.நா.வின் காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு 23-ஆம் நாள் திங்கள்கிழமை நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது.
காலநிலையை சமாளிப்பதில் ஆக்கப்பூர்வ சக்தியாக விளங்குகிறோம்: ஐ.நா. கூட்டத்தில் சீனா

ஐ.நா.வின் காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு 23-ஆம் நாள் திங்கள்கிழமை நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது. அப்போது, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உரை நிகழ்த்துகையில், 

‘காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. ஒப்பந்தம்’ மற்றும் ‘பாரிஸ் உடன்படிக்கை’ ஆகியவை தொடர்பான கடமைகளை சீனா நிறைவேற்றி வருகிறது. சீனா, சர்வதேச கூட்டங்களில் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான வாக்குறுதியை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளதோடு, இது ஒரு பெரிய நாட்டின் மனவுறுதி மற்றும் பொறுப்புதான் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளது. 

நிலையான வளர்ச்சிக்குத் தேவைவான உள்ளடக்கம், பொது எதிர்காலம் உடைய சமூகத்தை உருவாக்குவதில் ஏற்க வேண்டிய பொறுப்பு ஆகியற்றைக் கருத்தில் கொண்டு, சீனா எப்போதும் காலநிலை மாற்றத்தைச் சமாளித்து வருகிறது. இதுவரை, ஆற்றல் சிக்கனம், புதிய ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாடு ஆகிய துறைகளில் சீனா உலகில் முதலிடம் வகிக்கிறது. 

உயிரினச் சூழல் கட்டுமானம் சீனத் தேசிய வளர்ச்சி நெடுநோக்கு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு, உலகளவில் புதிதாக தோன்றியுள்ள பசுமை நிலங்களின் நான்கில் ஒரு பகுதி, சீனாவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'செயல்கள் பழங்கள் ஆகும், ஆனால் சொற்கள் இலைகள் தான்' என்ற பழமொழி மேலை நாடுகளில் உண்டு. 

அதைப்போல, உலக காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் முக்கிய காலக்கட்டத்திலேயே, ஒவ்வொரு நாடும் மனவுறுதியுடன் செயல்பட்டு, ‘பாரிஸ் உடன்படிக்கை’யை நடைமுறைக்கு முன்னெடுத்து, சமாளிப்பு நடவடிக்கைக்கு புதிய உந்து சக்தியை ஊட்ட வேண்டும்.

தகவல்: சீன வானொலி தமிழ் பிரிவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com