இந்தியாவுடனான வலுவான தொடர்பு உலகுக்கு நன்மை பயக்கும்:  சீனா நம்பிக்கை

சீனாவும் இந்தியாவும் வலுவான தொடர்பை நிலைநிறுத்துவது இரு நாடுகளுக்கும் உலகுக்கும் நன்மை பயக்கும்.
இந்தியா - சீனா நல்லுறவு
இந்தியா - சீனா நல்லுறவு

சீனாவும் இந்தியாவும் வலுவான தொடர்பை நிலைநிறுத்துவது இரு நாடுகளுக்கும் உலகுக்கும் நன்மை பயக்கும் என்று சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யி புதன்கிழமை தெரிவித்தார்.

ஐ.நா.வின் 74ஆவது பொதுப் பேரவையில் நடைபெற்ற பொது விவாதத்தையொட்டி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கருடன் வாங் யி சந்திப்பு நடத்தினார்.

அப்போது வாங் யி கூறுகையில், உலக அளவில் சீனாவும் இந்தியாவும் மட்டுமே நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட வளரும் நாடுகள்; வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் முக்கியப் பிரதிநிதிகள். இரு தரப்புக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவது, பரஸ்பர புரிதலை மேம்படுத்துவது, வேறுபாடுகளைச் கட்டுக்குள் வைத்திருப்பது, ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவது ஆகியன இரு நாடுகளுக்கு மட்டுமல்ல உலகுக்கே நன்மை அளிக்கும் என்று தெரவித்தார்.

ஜெய்ஷங்கர் கூறுகையில், இரு தரப்பிலான அடுத்தகட்ட உயர்நிலைக் கலந்தாய்வுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கின்றது. பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் வேறுபாடுகளைத் தீர்க்க இந்தியா ஆர்வம் கொண்டுள்ளது என்றார்.

தகவல் : தமிழ்ப் பிரிவு, சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com