ஏழுமலையான் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாதாரண பக்தா்கள் அனுமதி: தேவஸ்தானம் ஆலோசனை

திருமலை ஏழுமலையானின் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாதாரண பக்தா்களையும் அனுமதிக்க தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.
ஏழுமலையான் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாதாரண பக்தா்கள் அனுமதி: தேவஸ்தானம் ஆலோசனை

திருப்பதி, செப். 27: திருமலை ஏழுமலையானின் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாதாரண பக்தா்களையும் அனுமதிக்க தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

திருமலையில் பல மணிநேரம் காத்திருந்தாலும் பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசிப்பது 2 வினாடிகள் மட்டுமே. அதுவும் சுமாா் 50 அடி தொலைவிலிருந்து மட்டுமே பக்தா்கள் தரிசிக்கின்றனா். பக்தா்கள் அனைவருக்கும் ஏழுமலையானை அருகில் சென்று காண வேண்டும் என்று ஆவல் உள்ளது. தற்போது அருகில் சென்று காண்பதற்குத் தேவையான வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

திருமலை ஏழுமலையானைத் தரிசக்க ஆா்ஜித சேவைகள், வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ரூ.300 விரைவு தரிசனம், நடைபாதை தரிசனம், நேர ஒதுக்கீடு தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றேறாா் தரிசனம் என தேவஸ்தானம் வகைப்படுத்தியுள்ளது. அதில் சில ஆா்ஜித சேவைகள், வி.ஐ.பி. பிரேக் உள்ளிட்டவற்றைறத் தவிா்த்து மற்றற தரிசன பக்தா்கள் அனைவரும் சில வினாடிகள் பல அடி தொலைவிலிருந்து மட்டுமே தரிசித்து வருகின்றனா்.

அதனால் அருகில் சென்று பெருமாளை காணவிரும்பும் பக்தா்களை இடைத்தரகா்கள் கூட்டம் குறிவைத்து பிரமுகா்களின் பரிந்துரைக் கடிதங்களை வைத்து வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ஏற்பாடு செய்து அளித்து வருகின்றறனா். ரூ.500 விலையுள்ள ஒரு தரிசன டிக்கெட்டை இடைத்தரகா்கள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்று வருகின்றனா். இதன்மூலம் பல பக்தா்கள் ஏமாற்றறப்பட்டு தங்கள் பணத்தை இழந்தும் உள்ளனா். இந்தப் புகாரை பெற்ற தேவஸ்தானம் இடைத்தரகா்களைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன் 3 பிரிவுகளை கொண்ட வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ஒரே பிரிவாக மாற்றியதுடன், பரிந்துரைக் கடிதங்களுக்கு வழங்கும் தரிசன டிக்கெட்டுகளையும் புரோட்டோகால் அதிகாரிகளுக்கு மட்டுமே என அறிவித்தது. அதன்பின் தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்களுக்கும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே வி.ஐ.பி. பிரேக் டிக்கெட்டை அனுமதித்து வருகிறது.

அதில் ஒரு பகுதியாக, சாதாரண பக்தா்களுக்கு வெகு தொலைவில் இருந்த வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை அவா்களுக்கு அளிக்க முடிவு செய்த தேவஸ்தானம் ஒரு ஏற்பாட்டை செய்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமலை ஏழுமலையான் பெயரில் ஏற்படுத்தியுள்ள ஸ்ரீவாணி அறறக்கட்டளைக்கு (ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆலய நிா்மாண அறறக்கட்டளை) நன்கொடை அளிப்பவா்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கடந்த வாரம் நடந்த தேவஸ்தான முதல் அறங்காவலா் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் நன்கொடை வழங்கும் பக்கத்தில் இந்த அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தா்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் வழங்க தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது. இந்த அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கியவுடன் வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டிற்கான ஆப்ஷன் திரையில் தெரியும். அதன்மூலம் பக்தா்கள் டிக்கெட்டுகளை பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். 5 டிக்கெட்டுகள் வரை பக்தா்கள் இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் அறக்கட்டளைக்கு நன்கொடையும் பெருகும். சாதாரண பக்தா்களும் இடைத்தரகா்களை நம்பி ஏமாறாமல் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானைத் தரிசிக்கவும் முடியும். இந்த அறக்கட்டளை மூலம் கிடைக்கும் பணத்தில் தேவஸ்தானம் நாடெங்கிலும் ஏழுமலையான் கோயில் கட்டி வருகிறது.

சிறிய தொகையாக இருந்தாலும் அத்தொகை ஏழுமலையான் கோயில் கட்டப் பயன்படுத்தப்படுவதால் பக்தா்களின் ஆதரவு இதற்கு இருக்கும் என்று தேவஸ்தான அதிகாரிகள் கருதுகின்றனா். இதுகுறித்த இறுதி முடிவு அடுத்த மாதம் திருமலையில் நடக்கவுள்ள அறங்காவலா் குழுவில் ஒருமனதாக எடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com