நைஜீரியாவில் மேலும் ஒரு புதிய வகை கரோனா

நைஜீரியாவில் மேலும் ஒரு புதிய வகை கரோனா பரவி வருவதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
நைஜீரியாவில் மேலும் ஒரு புதிய வகை கரோனா
Updated on
1 min read

நைரோபி: நைஜீரியாவில் மேலும் ஒரு புதிய வகை கரோனா பரவி வருவதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அந்த அமைப்பின் தலைவா் ஜான் கெங்சாங் வியாழக்கிழமை கூறியதாவது:

நைஜீரியாவில் புதிய வகை கரோனா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது, பிரிட்டனிலும் தென் ஆப்பிரிக்காவிலும் கண்டறியப்பட்ட கரோனா வகைகளிலிருந்து மாறுபட்டுள்ளது.

நைஜீரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பும், ஆப்பிரிக்க தொற்று நோய் மரபணுவியல் மையமும் அந்தத் தீநுண்மியை ஆய்வு செய்து வருகின்றன.

அதுகுறித்து முழுமையான விவரங்கள் இனிமேல்தான் தெரிய வரும் என்றாா் அவா்.

நைஜீரியாவின் ஆசன் மாகாணத்தில் கரோனா நோயாளிகளிடமிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதியும் அக்டோபா் மாதம் 9-ஆம் தேதியும் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் புதிய வகை கரோனா கண்டறியப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com