நோய் தடுப்பில் நம்பிக்கைச் சுடரை ஏற்றிய சீனா: அமெரிக்க சிந்தனை கிடங்கு

அமெரிக்க பீட்டர்சன் சர்வதேசப் பொருளாதார ஆய்வகம் மார்ச் 26ஆம் நாள் தனது இணையத்தளத்தில்,
நோய் தடுப்பில் நம்பிக்கைச் சுடரை ஏற்றிய சீனா: அமெரிக்க சிந்தனை கிடங்கு

அமெரிக்க பீட்டர்சன் சர்வதேசப் பொருளாதார ஆய்வகம் மார்ச் 26ஆம் தேதி தனது இணையத்தளத்தில், “சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மருத்துவப் பொருட்கள் நம்பிக்கைச் சுடரை ஏற்றியுள்ளன” என்ற கட்டுரையை வெளியிட்டது.

அண்மையில் கொவைட்-19 நோய் குறித்து டிரம்ப் அரசு சீனாவைத் தூற்றியதன் காரணமாக, சீனாவிலிருந்து மருத்துவப் பொருள்களின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு விடுமோ என மக்கள் கவலைப்பட்டனர்.  ஆனால் அமெரிக்காவுக்கு மருத்துவப் பொருள்கள் ஏற்றுமதியில் பெருமளவு வீழ்ச்சி அடையவில்லை என்று சீனச் சுங்கத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இது, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது. 

இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான தடையோ, மருத்துவமனைகள் உள்ளூர் பொருட்களை மட்டும் வாங்க வேண்டும் என்ற விதிகளோ வர்த்தகப் பாதுகாப்புவாதமாகும். இவை, மருத்துவப் பொருட்களின் விநியோகத்துக்குப் பாதகம் ஏற்படுத்துவதுடன் அவற்றின் விலை உயரவும் வழிவகுக்கும். அத்துடன், உயிரிழப்பையும் ஏற்படுத்தக் கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com