24 மணி நேரத்தில் 864 பேர் பலி: ஸ்பெயினில் தொடரும் துயரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஸ்பெயின் நாட்டில் 24 மணி நேரத்தில் 864 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு புதன்கிழமை தெரிவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஸ்பெயின் நாட்டில் 24 மணி நேரத்தில் 864 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு புதன்கிழமை தெரிவித்தது.

இதன்மூலம், அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டி 9,053 ஆக உள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வந்தாலும் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டி 1,02,136 ஆக உள்ளது. உலகளவில் அதிகம் பலியானோரின் எண்ணிக்கையில் இத்தாலிக்கு (12,428) அடுத்தபடியாக ஸ்பெயின் உள்ளது.

ஸ்பெயின் அரசு செவ்வாய்கிழமை தெரிவிக்கையில், 24 மணி நேரத்தில் 849 பேர் பலியானதாக அறிவித்தது. இதன்மூலம், 48 மணி நேரத்தில் அங்கு 1,713 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் அடுத்த மையமாகக் கருதப்பட்டு வரும் அமெரிக்காவில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,88,592 ஆக உள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்து 4,056 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவைப் பொருத்தவரை இந்த பலி எண்ணிக்கை வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் பாதித்தோரின் எண்ணிக்கை: 8,72,830

உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை: 43,271

உலகளவில் குணமடைந்தோரின் எண்ணிக்கை: 1,84,533

இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை: 1,590

இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை: 45

இந்தியாவில் குணமடைந்தோரின் எண்ணிக்கை: 148

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com