தூய்மை  வளர்ச்சி வழிமுறையைக் கடைப்பிடித்து வரும் சீனா

கொவைட்-19 நோய் கட்டுப்பாட்டுப் பணியைத் தளர்த்தாமல் செயல்படும் வேளையில்,
தூய்மை  வளர்ச்சி வழிமுறையைக் கடைப்பிடித்து வரும் சீனா

கொவைட்-19 நோய் கட்டுப்பாட்டுப் பணியைத் தளர்த்தாமல் செயல்படும் வேளையில், உற்பத்தியை மீட்கும் சூழ்நிலையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சேஜியாங் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.

பொருளாதார வளர்ச்சிக்காக சுற்றுச்சூழலைச் சீர்குகலைக்கக் கூடாது.  சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உற்பத்தித் திறனை மேம்படுத்துவதாகும் என்று அவர் ஆய்வுப் பயணித்தின் போது அறிவுறுத்தினார்.

தற்போது, கொவைட்-19 நோய் உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. உலகப் பொருளாதாரம் கடும் அறைகூவலை எதிர்கொள்கிறது. உலகின் 2ஆவது பெரிய பொருளாதார அளவு கொண்ட சீனா, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி ரீதியிலான பெரும் அழுத்தத்தையும் எதிர்கொள்ளும்.  இந்நிலையில், பொருளாதார வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றும் விதம், பழைய வளர்ச்சி பாதைக்கு திரும்புவது குறித்து, பலர் கவலைப்படுகின்றனர்.

எவ்வளவு கஷ்டங்களைச் சந்தித்தாலும், மக்களுக்கு வாக்குறுதியை சீனாவின் ஆளும் கட்சி உறுதியாக பின்பற்றும் என்பதை ஷிச்சின்பிங்கின் இந்த ஆய்வுப் பயணமானது எடுத்துக்காட்டுகிறது.

கொடூர வைரஸை எதிர்நோக்கும் போது,  தூய்மை வளர்ச்சி வழிமுறையை நிலைத்து நின்று, சுற்றுச்சூழல் கட்டுமானத்தை மேம்படுத்தி, மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே இசையான சகவாழ்வு நிலையை நனவாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஆழமாக ஏற்படுத்தப்படும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com