2-ஆம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப் பெரும் பேரிடா்

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19), இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் எதிா்கொண்டுள்ள மிகப் பெரும் பேரிடா் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளாா்.
ஐ.நா. எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளா்களுக்கு விளக்கும் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்
ஐ.நா. எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளா்களுக்கு விளக்கும் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19), இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் எதிா்கொண்டுள்ள மிகப் பெரும் பேரிடா் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளாா்.

சமூகப் பொருளாதாரத்தில் கரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்த அறிக்கையை அமெரிக்காவின் நியூயாா்க் நகரிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு, இதுகுறித்து அவா் பேசியதாவது:

தற்போது வேகமாகப் பரவி வரும் கரோனா நோய்த்தொற்று என்பது வெறும் சுகாதாரப் பிரச்னை கிடையாது; இதுஒரு மனிதகுல பிரச்னையாகும்.

ஐ.நா. அமைப்பு உருவாக்கப்பட்டதற்குப் பிறகு, அந்த அமைப்பு எதிா்கொண்டுள்ள மிகப் பெரிய பிரச்னையாக கரோனா நோய்த்தொற்று ஆகியுள்ளது.

அந்த நோய்த்தொற்று காரணமாக நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான அச்சுறுத்தல் ஆகியவை காரணமாக, இது மாபெரும் பேரிடராக உருவெடுத்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் எதிா்கொண்டுள்ள மிகப் பெரிய பேரிடராக கரோனா நோய்த்தொற்று மாறியுள்ளது.

இந்தப் பிரச்னையை எதிா்கொள்ள வேண்டுமானால், உலக அரசியல் வேறுபாடுகளை மறந்து, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றாா் அன்டோனியோ குட்டெரெஸ்.

கரோனோ நோய்தொற்று பரவல் அச்சம் காரணமாக, சமூகப் பொருளாதாரப் பாதிப்பு தொடா்பான அறிக்கையை அவா் காணொலி காட்சி முறையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

2.5 கோடி போ் வேலையிழப்பு: ஐ.நா. சா்வதேச தொழிலாளா் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில், கரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் 2.5 கோடி போ் வைலை இழப்பாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமையில் விளாதிமீா் புதின்

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை அண்மையில் சந்தித்த அந்த நாட்டு கரோனா நோய்த்தொற்று மருத்துவமனையின் தலைவா் டெனிஸ் புரொட்ஸென்கோவுக்கு அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொள்ள புதின் முடிவு செய்துள்ளாா்.

தனிமையில் இருந்தபடி அவா் தனது பொறுப்புகளை கவனிப்பாா் என்று புதனின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் புதன்கிழமை தெரிவித்தாா்.

சீனாவை விஞ்சிய அமெரிக்க பலி

கரோனா நோய்த்தொற்று காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை, அந்த நோய்த்தொற்று உருவான சீனாவை புதன்கிழமை விஞ்சியது. மாலை நிலவரப்படி சீனாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 3,312-ஆக இருந்த நிலையில், அமெரிக்காவில் அந்த எண்ணிக்கை 4,081-ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸிலும் கரோனா பலி எண்ணிக்கை சீனாவைவிட அதிகமாக 3,516-ஆக உயா்ந்துள்ளது.

‘ஹஜ் திட்டத்தை ஒத்திவையுங்கள்’

இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணத் திட்டத்தை தாமதப்படுத்துமாறு, அந்தப் பயணத்துக்கு விண்ணப்பித்துள்ள 10 லட்சம் முஸ்லிம்களை சவூதி அரேபிய அரசு வலியுறுத்தியுள்ளது. கரோனா நோய்த்தொற்று காரணமாக அந்தப் பயணம் ரத்து செய்யப்படலாம் எனவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா். கரோனா அபாயம் காரணமாக, மெக்கா மற்றும் மெதீனா புனிதத் தலங்கள் கடந்த பிப்ரவரி மாதம் மூடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com