கரோனா வைரஸ் தடுப்புப் பற்றி 7 நாடுகளுடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட சீனா 

சீன அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் முதலாவது மருத்துவமனையைச் சேர்ந்த..
கரோனா வைரஸ் தடுப்புப் பற்றி 7 நாடுகளுடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட சீனா 

சீன அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தின் முதலாவது மருத்துவமனையைச் சேர்ந்த 7 முன்னணி மருத்துவ நிபுணர்கள் ஏப்ரல் 2ஆம் நாள் பிற்பகல், காணொலிக்காட்சி முறையின் மூலம், இந்தியா, பாகிஸ்தான், போலந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன், ரஷியா முதலிய நாடுகளைச் சேர்ந்த 70 மருத்துவமனைகளிலுள்ள மருத்துவ நிபுணர்களுடன் புதிய ரக கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் பொது அக்கறையுடைய பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். 

அப்போது, சீன அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழக மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டு வரும் மோனோக்ளோனல் ஆன்டிபாடி மருந்தான டோசிலிசுமாப்  பிளசின் வழக்கமான சிகிச்சை முறை பற்றிய ஆய்வு மற்றும் பயன்பாடு குறித்து இக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு மற்றும் நோயாளிகளின் மருத்துவச் சிகிச்சை தொடர்பாக வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுக்கு அவர்கள் ஆலோசனை வழங்கினர்.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை இச்சிகிச்சை முறையை, தனது மருத்துவச் சிகிச்சைத் திட்டத்தில் சேர்த்துள்ளது. அதோடு, ஈரான், இத்தாலி முதலிய நாடுகளிலும் இம்முறை பயன்படுத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com