சீனாவில் தியாகிகளுக்கும் உயிரிழந்தோருக்கும் தேசிய அஞ்சலி

ஷி ஜின்பிங் உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசுத் தலைவர்கள் ஏப்ரல் 4ஆம் நாள்
சீனாவில் தியாகிகளுக்கும் உயிரிழந்தோருக்கும் தேசிய அஞ்சலி

ஷி ஜின்பிங் உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசுத் தலைவர்கள் ஏப்ரல் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் புதிய ரக கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கும் இந்நோயினால் உயிரிழந்த சக நாட்டவர்களுக்கும் 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

காலை 10 மணிக்கு வான் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. ஹுபெய் மாநிலத்தின் வூஹானிலும் இதர இடங்களிலும் பொது மக்கள் அமைதியாக நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். வாகனங்கள், தொடர்வண்டிகள், கப்பல்கள் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒலி எழுப்பின.

சீனாவில் ஏப்ரல் 4ஆம் நாளான இன்று ட்சிங்மிங் தினமாகும். இந்த நாளில் சீன மக்கள் தங்களது மூதாதையர்களை வழிபாடு செய்வதும், நாட்டுக்காக உயிரிழந்த தியாகிகளை நினைவுக் கூர்வதும் வழக்கமாகும்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு சீனாவில் மிக விரைவாகவும் மிக அதிகளவிலும் ஏற்பட்ட பெரிய அவசர பொதுச் சுகாதார சம்பவம் கொவைட்-19 நோய் தொற்று. ஏப்ரல் 3ஆம் நாள் வரை சீனாவில் கொவைட்-19 நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3335. இப்போராட்டத்தில் உயிரிழந்த மருத்துவப் பணியாளர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் இன்று சீனாவில் தேசிய அஞ்சலி செலுத்தப்பட்டது.

முழு நாட்டிலும், வெளிநாடுகளிலுள்ள சீன தூதரங்களிலும் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. மக்கள் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். வாகனங்கள், தொடர்வண்டி, கப்பல், ஒலி எழுப்பின. மேலும், வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.இதன் மூலம், கொவைட்-19 நோயை எதிர்த்து போராடுவதில் உயிரிழந்த தியாகிகளுக்கும் சக நாட்டவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கின்றோம்.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக, ஹுபெய் மாநிலத்தில் முன்னணியில் போராடி வந்தவர்களில் 1,500க்கும் மேற்பட்ட மருத்துவப் பயணியளர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டது.தற்போது வரை குறைந்தது 46 மருத்துவப் பணியாளர்கள் உயிரிழந்தனர். அவர்களில், வாங்பீங், ஃபெங்சியாவ்லின், ஜியாங் சுயெசிங், லியூஸிமிங், லீவென்லியங் உள்ளிட்ட 14 பேர், தியாகிகள் என உறுதி செய்யப்பட்டனர். தியாகி என்பது சீனாவில் தேசம், சமூகம், மற்றும் மக்களுக்கு தங்களது உயிரைத் தியாகம் செய்யும் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கௌரவம் ஆகும்.

பத்தாயிரக்கணக்கான மருத்துவப் பணியாளர்கள், வுஹான் நகரிலும் உள்ளூரிலும், கொவைட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில், மருத்துவப் பணியாளர்கள் வீரர்கள் ஆவர்.

சீனாவின் விமான நிலையம், குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியாளர்கள் இன்றளவிலும் பகலிலும் இரவிலும் தொடர்ந்து சேவையாற்றி வருகின்றனர்.

சீனர்கள் எப்போதும் மிகவும் தைரியமானவர்கள், தைரியமானவர்களால் சீனா நன்றாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்று அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கிஸ்ஸிங்கர் கூறினார்.

சீனாவைப் போல், முன்பே இல்லாத அளவிற்கு ஏற்பட்ட உலகளாவிய தொற்று நோய் பாதிப்பில், உலகின் பல்வேறு நாடுகளின் மக்கள் சொந்த நாட்டின் மிக தைரியமானவரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com