கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் ஸ்பெயின் இரண்டாமிடம்

​கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதித்த நாடுகள் வரிசையில் இத்தாலியைப் பின்னுக்குத் தள்ளி ஸ்பெயின் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் ஸ்பெயின் இரண்டாமிடம்


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதித்த நாடுகள் வரிசையில் இத்தாலியைப் பின்னுக்குத் தள்ளி ஸ்பெயின் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதித்த நாடாக இத்தாலி இருந்தது. இதையடுத்து, அதிகம் பாதித்த நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதலிடத்துக்கு வந்தது.

இந்நிலையில், நோய்த் தொற்றால் அதிகம் பாதித்த நாடுகள் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் உள்ளது. இத்தாலியில் 1,19,827 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்பெயினில் பாதித்தோரின் எண்ணிக்கை 1,24,736 ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் பாதித்தோரின் எண்ணிக்கை: 11,30,844

உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை: 60,149

உலகளவில் குணமடைந்தோரின் எண்ணிக்கை: 2,35,902

இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை: 3,082

இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை: 86

இந்தியாவில் குணமடைந்தோரின் எண்ணிக்கை: 229

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com