கோப்புப்படம்
கோப்புப்படம்

ஸ்பெயின் பலி எண்ணிக்கை: தொடர்ந்து 3-வது நாளாக குறைவு

ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஒருநாளைக்கு பலியாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 3-வது நாளாக குறைந்துள்ளது.


ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஒருநாளைக்கு பலியாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 3-வது நாளாக குறைந்துள்ளது.

சீனாவை பாதிக்கத் தொடங்கி, அதன் பிறகு அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு பரவிய கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,11,637 ஆக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் உள்ளது. அங்கு 1,30,759 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோய்த் தொற்றால் அதிகம் பலியானோரின் எண்ணிக்கை கொண்ட நாடாக இத்தாலி உள்ளது. அங்கு இதுவரை 15,362 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஸ்பெயின் இருக்கிறது. ஸ்பெயினில் இதுவரை 12,418 பேர் பலியாகியுள்ளனர்.

ஸ்பெயினில் பலியானோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 3 நாள்களாக அந்நாட்டில் ஒருநாளைக்கு பலியாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 674 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிக்கையில், கடந்த 10 நாள்களில் ஒருநாளைக்கு அதிகம் பலியாவோரின் எண்ணிக்கையில் இதுவே குறைந்தபட்ச எண்ணிக்கை என்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com