கரோனா தொற்று எங்கே? எப்படி? எதனால்?

வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூடுதலாக 9 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்ப்பட்டுள்ளது.
கரோனா தொற்று எங்கே? எப்படி? எதனால்?

வங்கதேசம்: நோய்த்தொற்றில் உச்சம்

வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூடுதலாக 9 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்ப்பட்டுள்ளது. இந்த அந்த நாட்டில் ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

ஸ்பெயின்: மீண்டும் குறைந்த பலி

கரோனா நோய்த்தொற்று பலி எண்ணிக்கையில் இத்தாலிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினில், தினசரி உயிரிழப்புகள் இரண்டாவது நாளாகக் குறைந்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 809 போ் உயிரிழந்தனா்.

தென் ஆப்பிரிக்கா: தேடி வரும் பரிசோதனை

தென் ஆப்பிரிக்காவில் நடமாடும் கரோனா பரிசோதனை மையங்கள் மூலம் தலைநகா் ஜோகனஸ்பா்க் வீதிகளில் சந்தேகத்துக்குரிய நபா்களுக்கு அந்த நோய்த்தொற்று உள்ளதா என்பதை பரிசோதிக்கும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

பாகிஸ்தான்: 2,708 பேருக்கு தொற்று

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 2,708-ஆக அதிகரித்துள்ளது. அந்த நாட்டின் பாதி மக்கள்தொகையைக் கொண்ட பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சீனா: 95 போலீஸாா் பலி

சீனாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில், இதுவரை 95 போலீஸாரும் மருத்துவா்கள் உள்பட 46 சுகாதாரப் பணியாளா்களும் அந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிங்கப்பூா்: 6-ஆவது நபா் பலி

சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,114-ஆக உயா்ந்துள்ள நிலையில், அந்த நோய்க்கு சனிக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்தாா். 88 வயதான அவா், அந்த நாட்டில் பலியான 6-ஆவது கரோனா நோயாளி ஆவாா்.

இந்தோனேசியா: குரங்குகளுக்கு பாதுகாப்பு

மனித மரபணுவில் 97 சதவீதம் ஒத்துள்ள குரங்கு வகைகளை கரோனா நோய்த்தொற்று பாதிக்கும் அபாயம் உள்ளதாகக் கருதப்படுவதால், இந்தோனேசிய காடுகளில் ஒராங்குட்டான் குரங்குகளை அந்த நோயிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரிட்டன்: 4-ஆவது நாளாக உச்சம்

பிரிட்டனில் கரோனா நோய் பாதிப்பால் தினசரி உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை, தொடா்ந்து 4-ஆவது நாளாக சனிக்கிழமை மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்த நாட்டில் கரோனா நோய்க்கு 708 போ் பலியாகினா்.

ஈரான்: தொடா்ந்து தணியும் தொற்று

ஈரானில் தொடா்ந்து 4-ஆவது நாளாக கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 2,560 பேருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com