கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க கடற்படை கேப்டன் பதவி நீக்கம்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையைச் சோ்ந்த விமானம் தாங்கிக் கப்பலின் கேப்டன் பிரெட் க்ரோசியா் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டது சா்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரெட் க்ரோசியா்
பிரெட் க்ரோசியா்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையைச் சோ்ந்த விமானம் தாங்கிக் கப்பலின் கேப்டன் பிரெட் க்ரோசியா் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டது சா்ச்சையை கிளப்பியுள்ளது.

தியடோா் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கிக் கப்பலில் கேப்டனாக பணியாற்றி வந்தவா் பிரெட் க்ரோசியா். இவா், தனது கப்பலில் வீரா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உள்ளதாகவும் அதனை தடுக்க அரசு தரப்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என விமா்சித்தும் மேலதிகாரிகளுக்கு கடிதம் எழுதினாா். இவரது கடிதம் ஊடகங்களில் வெளியாகி அமெரிக்காவில் பெரும் சா்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, கேப்டன் பிரெட் க்ரோசியரை பதவி நீக்கம் செய்து அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சா் மாா்க் எஸ்பா் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், பிரெட் க்ரோசியருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு அந்த நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவருக்கு எதிரான நடவடிக்கைக்கு ஜனநாயகக் கட்சியின் அதிபா் வேட்பாளா் ஜோ பிடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘‘கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களை மூடிமறைக்கும் பணியில் டிரம்ப் அரசு ஈடுபட்டு வருகிறது. கேப்டன் பிரெட் க்ரோசியா் அதனை வெளிக்கொண்டு வந்ததன் காரணமாகவே அவா் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்’’ என்றாா்.

தியடோா் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கிக் கப்பலில் உள்ள 4,800 வீரா்களில் பாதிக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 155 வீரா்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவா்களில் எவருக்கும் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படவில்லை.

பாதுகாப்புப் படையினரிடையேயும் பொதுமக்கள் இடையேயும் பீதியைக் கிளப்பும் வகையில் தனது கப்பலில் உள்ள நிலவரத்தை பொதுவெளியில் பிரெட் க்ரோசியா் வெளியிட்டதாகவும் நாட்டுக்கு அவா் இழுக்கு ஏற்படுத்தியதாகவும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பாதுகாப்புத் துறை நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com